டி20 போட்டியை இப்படித்தான் அணுகவேண்டும்! – மாறுபட்ட கருத்துக்களை சொன்ன விராட் கோலி, ரோகித் சர்மா!

0
10800

டி20 போட்டிகளை எப்படி அணுக வேண்டும் என்று இரு வெவ்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர் இந்திய அணியின் ஜாம்பவான்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி.

டி20 போட்டிகளை சமீப காலமாக எப்படி அணுக வேண்டும். கடந்த காலங்களுக்கும், இப்போதும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன? என்பது பற்றி பேசிய ரோஹித் சர்மா கூறுகையில்,

- Advertisement -

“டி20 கிரிக்கெட்டை இப்போது பார்க்கையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்ளும் ஆங்கர் ரோல் என்பது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. ஏதாவது ஒரு போட்டியில் 20 ரன்களுக்கு மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகள் இழந்தால் மட்டுமே அப்படிப்பட்ட ஆட்டம் தேவைப்படுகிறது. மற்றபடி டி20 அணுகுமுறையில் பல மாற்றங்கள் வந்துவிட்டது.

முதல் ஓவரிலிருந்து அடித்து விளையாட வேண்டும் என்கிற நோக்கம் தேவைப்படுகிறது. மிடில் ஓவர்களிலும் சில ஓவர்கள் நின்று ஆடலாம், பிறகு அடித்து விளையாடுவது பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்கிற வேலை இல்லாமல் போய்விட்டது. அதிரடியாக விளையாடி 10-15 பந்துகளில் 30-40 ரன்கள் அடித்தால் அணியின் ஸ்கோர் உச்சத்திற்கு சென்று விடும். இதை இரண்டு மூன்று வீரர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படிப்பட்ட அணுகுமுறை இப்போது தேவைப்படுகிறது.” என்றார் ரோகித் சர்மா.

ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் குறித்து பேசிய இந்த கருத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக பேசியுள்ளார் விராட் கோலி. அவர் பேசியதாவது:

- Advertisement -

“கிரிக்கெட்டிற்கு வெளியே இருக்கும் பலர் டி20 அணுகுமுறையை பற்றி வெவ்வேறு விதமாக தங்களது கருத்துக்களை வைத்திருப்பர். ஆனால் உள்ளே இருக்கும் பொழுது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பவர்-பிளே ஓவர்கள் முடிந்தவுடன் வரும் பந்துவீச்சாளர்களை எளிதில் அதிரடியாக விளையாடிவிட முடியாது. ஓரிரு ஓவர்கள் அவர்களது பந்துவீச்சு அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விளையாட வேண்டும்.

அதன் பிறகு குறிப்பிட்ட பவுலரின் டைசி இரண்டு ஓவர்களில் அபாரமாக விளையாடிக் கொள்ளலாம். அதேபோல் மிடில் ஓவர்களில் சற்று நிதானமான அணுகுமுறை தேவை. வரிசையாக விக்கெட்டுகளை இழந்தால் டெத் ஓவரில் சரிவு ஏற்பட்டுவிடும். பவர்-பிளே, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அணுகுமுறை தேவை.” என்று டி20 குறித்து பேசினார் விராட் கோலி.