ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் நடுவில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதற்கு அனுமதித்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் பெரிய தவறு செய்து விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் பாதியில் மூன்றாவது போட்டியின் முடிவுக்கு பிறகு தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்தார். அவரது இந்த முடிவு இந்திய கிரிக்கெட் தாண்டி உலக கிரிக்கெட்டிலும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் தொடரின் பாதையில் ஓய்வு பெற்றது சரி ஏற்றது என சுனில் கவாஸ்கர் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அதில் அவர் கூறும்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அணி உடன் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க இருப்பதால், பொதுவாக சிட்னி மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் ரவிச்சந்திரன் அஸ்வினின் தேவை இந்திய அணிக்கு இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். இடையிலேயே அவர் இப்படியான முடிவு எடுத்ததில் பலருக்கும் உடன்பாடு இல்லை.
இது குறித்து பசித் அலி கூறும் பொழுது “நான் அஸ்வினின் பத்திரிகையாளர் சந்திப்பை பார்த்தேன். அதில் அவர் பல விஷயங்களை மனம் திறந்து பேசவில்லை என்பது தெரிந்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் ரவிச்சந்திரன் அஸ்வினை தொடரின் பாதையில் ஓய்வு பெற விட்டிருக்க மாட்டார். என்னால் இதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும்”
இதையும் படிங்க: விராட்டுக்கு எல்லாம் தெரியும்.. கவாஸ்கர் இப்படி நியாயம் இல்லாமல் பேச வேண்டாம் – இளம் வயது பயிற்சியாளர் பேட்டி
“நியூசிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அழைக்கப்பட்டார். இந்த இடத்திலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் ஆஸ்திரேலியாவில் ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கு இருந்திருக்க வேண்டும். அவரை ஓய்வு பெற அனுமதித்தது கேப்டன் ரோஹித் செய்த மோசமான விஷயம். ரோஹித் மற்றும் கம்பீர் இருவரும் அமர்ந்து அவரின் தேவையை புரிய வைத்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.