“விராட் கோலி வந்தால்.. இந்த வீரரை கட்டாயம் வெளியே அனுப்பிடுவாங்க” – ஆகாஷ் சோப்ரா உறுதி!

0
143
Virat

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் இந்தியாவில் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 14 மாதங்களுக்குப் பிறகு இந்திய டி20 அணிக்கு திரும்பியிருக்கிறார்கள்.

இதில் தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி முதல் டி20 போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக களம் இறங்கவில்லை. அவருடைய இடத்தில் இளம் வீரர் திலக் வர்மா களமிறங்கினார்.

- Advertisement -

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு, விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் விளையாட வைக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பார்க்கிறது. எனவே அவரையே முன்கூட்டி விளையாட வைத்திருக்கிறார்கள்.

நேற்றைய போட்டியில் முதல் இரண்டு விக்கெட்டுகள் சீக்கிரத்தில் விழ, திலக் வர்மா சிவம் துபே உடன் இணைந்து தன் பங்குக்கு 26 ரன்கள் எடுத்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார். ஆனால் அடுத்த போட்டியில் விராட் கோலி வரும்பொழுது யார் வெளியேறுவார்கள் என்கின்ற ஒரு பெரிய சந்தேகம் நிலவி வருகிறது.

இது குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ரோகித் மற்றும் கில் இருவரும் ஆட்டம் இழந்த பிறகு திலக் வர்மா இருந்தார். மேலும் மேல் வரிசையில் சிவம் துபே அனுப்பப்பட்டார். சிறிது நேரம் நன்றாக விளையாடிய திலக் ஆட்டம் இழந்தார். ஆனாலும் அவர் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்.

- Advertisement -

ஆனால் திலக் வர்மா அடுத்த போட்டியில் விராட் கோலி வரும்பொழுது விளையாட முடியுமா? இதேபோல் ஜெய்ஸ்வால் வந்தால் கில் விளையாட முடியுமா? இவர்கள் இருவரும் அணிக்கு திரும்பி வந்தால் நிச்சயம் மற்ற இருவரும் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். குறிப்பாக விராட் கோலி வந்தால் திலக் வர்மா வெளியேற்றப்படுவார்.

ஜித்தேஷ் நன்றாக விளையாடிய ஆட்டம் இழந்தார். அவர் சிறப்பாக விளையாடுகிறார். அதே சமயத்தில் அவர் 30 ரன்கள் 45 ரன்கள் ஆக மாற்றி ஆட்டத்தை முடிக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் அவருடைய இடம் இந்திய அணியில் உறுதி செய்யப்படவில்லை. சஞ்சு சாம்சன் இருக்கிறார். மேலும் கே.எல். ராகுலையும் புறக்கணிக்க முடியாது. ரிஷப் பண்ட் குணமடைந்தால் அவரும் போட்டிக்கு வருவார்” என்று கூறியிருக்கிறார்!