நிலைமை இப்படியே தொடர்ந்து சென்றால் ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து

0
77

இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. மூன்று போட்டியின் முடிவில் தென் ஆபிரிக்க அணி 2 வெற்றி மற்றும் இந்திய அணி ஒரு வெற்றி கண்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 3 போட்டியும் சேர்த்து மொத்தமாகவே 40 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். அவருடைய பார்ம் குறித்து ரசிகர்கள் உட்பட சில முன்னணி கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படியே விளையாடினால் அவரது இடம் பறிபோய்விடும்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் பண்டுக்கு ஒரு அறிவுரை வழங்கியிருக்கிறார். அணியில் தற்பொழுது தினேஷ் கார்த்திக் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் உள்ளனர். அவர்கள் இருவரும் விக்கெட் கீப்பர்கள். மேலும் சஞ்சு சம்சன் இந்திய அணியில் உள்நுழைய காத்துக்கொண்டிருக்கிறார்.

கே எல் ராகுல் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் அதே நேரத்தில் மிக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்யக்கூடியதும் வல்லவர். இப்படியே சுமாராக நீங்கள் விளையாடிக் கொண்டிருந்தால் நிச்சயமாக உங்களது இடத்தில் இவர்களில் எவரேனும் வந்துவிடுவார்கள். இந்திய அணியில் உங்களுக்கான இடம் பறிபோய்விடும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் சூப்பர் ஸ்டார் தான் ஆனால் இதில் கவனம் செலுத்த வேண்டும்

24 வயதான ரிஷப் பண்ட் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இன்னும் 10 ஆண்டுகள் அவர் விளையாடும் பட்சத்தில், மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக தன்னுடைய கேரியரை அவர் முடிப்பார். ஆனால் முடிவு தற்பொழுது வந்துவிடாது அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும்.

அவருடைய ஆட்டத்தை இனி அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார். ஆஃப் சைடு பக்கமாக அவர் அடிக்கும் பொழுது கூடுதல் பலத்தை சற்று வெளிப்படுத்த வேண்டும். எல்லா பந்துகளையும் ஓங்கி அடிக்காமல் சற்று சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆட்டத்தை முடிந்து நிதானமாக புத்திசாலித்தனமாக அவர் விளையாட வேண்டும் என்றும் இர்பான் பதான் அறிவுரை கூறியுள்ளார்.

ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ள இந்திய அணி இன்று நடைபெற இருக்கும் 4-வது போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். இன்று இந்திய அணி தோற்றுவிட்டால் தென்னாபிரிக்க அணி தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.