2 பேர் மனசு வச்சா.. சிஎஸ்கே பிளே ஆப்ல இருக்கும்.. மீண்டும் கிடைத்த செம சான்ஸ் – என்ன நடக்க வேண்டும்?

0
335
CSK

தற்போது திடீரென சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் நம்பிக்கை தருவதாக மாறி இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் பேட்டிங் யூனிட் மிகவும் சுமாராக அமைந்தது அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே-வில் அற்புதமாக அமைந்த விஷயம்

சிஎஸ்கே அணியில் பேட்டிங் யூனிட் மிக மோசமாக இருக்கும் சமயத்தில் பவுலிங் யூனிட் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. பவர் பிளேவின் கலீல் அகமத், மிடில் ஓவர்களில் நூர் அகமத் மற்றும் டெத் ஓவர்களில் பத்திரனா என மூன்று பந்துவீச்சாளர்கள் மூன்று இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக எதிரணியை குறைந்த ஸ்கோருக்கு இவர்களால் கட்டுப்படுத்தவும் முடியும்.

அதே சமயத்தில் பந்துவீச்சாளர்கள் தருகின்ற தாக்கத்தை பயன்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாக சிஎஸ்கே பேட்டிங் யூனிட் இல்லை. மேலும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் போராடும் அளவுக்கு ஸ்கோரை செட் செய்து கொடுப்பதும் இல்லை. தற்பொழுது திடீரென சிஎஸ்கே பேட்டிங் யூனிட்டில் ஏற்பட இருக்கும் மாற்றம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே பிளே ஆப்க்கு செல்லலாம்

தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் யூனிட்டில் துவக்க ஆட்டக்காரராக இளம் வீரர் ஷேக் ரஷீத் கடந்த ஆட்டம் கொண்டுவரப்பட்டார். இது உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது. இதனால் துவக்க இடத்தில் இருந்த ஓட்டை அடைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு தற்பொழுது புதிதாக டிவால்ட் பிரிவியஸ் வாங்கப்பட்டு இருக்கிறார். இவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார். இதைத்தொடர்ந்து நான்காவது இடத்தில் சிவம் துபே வருவார். சிஎஸ்கே அணியின் பெரிய பிரச்சினையாக மூன்றாவது மற்றும் நான்காவது இடம்தான் பேட்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எங்க பேட்ஸ்மேன் இத பண்றதே கிடையாது.. நான் சின்னசாமில ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சிட்டேன் – ஹேசில்வுட் பேச்சு

தற்போது துவக்க இடம் நிரப்பப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் அதிரடியாக பெரிய ஸ்கோர் அடிக்க முடிந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சிறப்பான ஃபார்முக்கு வருவார்கள் என்றால், நல்ல பவுலிங் யூனிட்டை வைத்திருக்கும் சிஎஸ்கே அணியால், அடுத்தடுத்து கட்டுக்கோப்பாக போட்டிகளை வெல்ல முடியும். இங்கிருந்து பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான சாத்தியங்களும் உண்டு. திடீரென சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -