2001ஆம் ஆண்டு மிக முக்கியமான இந்த தொடரை கங்குலி வெல்லத் தவறியிருந்தால் அவர் தன் கேப்டன் பதவியை இழந்திருப்பார் – ஹர்பஜன் சிங்

0
105
Sourav Ganguly and Harbhajan Singh

இந்திய கிரிக்கெட்டில் அசாரூதினுக்குப் பிறகு ஒரு நிலையான கேப்டனாக உருவெடுத்தவர் சவுரவ் கங்குலி. 90களின் பிற்பகுதியில் இந்திய கிரிக்கெட்டை சுழன்றடித்த மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்ட சூறாவளியில் இருந்து சவுரவ் கங்குலி தலைமையிலான அணி அடைந்த சில முக்கிய வெற்றிகளே, இந்திய கிரிக்கெட்டை காப்பாற்றின.

இதில் 2001 ஆம் ஆண்டு உலக கிரிக்கெட்டை தன் அசுர திறமையால் மிரட்டிக்கொண்டிருந்த ஸ்டீவ்வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை இந்தியாவில் டெஸ்ட் தொடரில் வென்றது, 2003ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் தொடரை வென்றது. அதே ஆண்டில் உலகக்கோப்பை இறுதிபோட்டிக்குச் சென்றது எல்லாம் முக்கியமானது.

- Advertisement -

இதில் 2001ஆம் ஆண்டு அசுரபல ஆஸ்திரேலியா அணியை இந்தியா டெஸ்ட் தொடரில் வெல்ல பந்துவீச்சில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் ஹர்பஜன் சிங் ஆவார். அந்தத் தொடரில்தான் கொல்கத்தா டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்து முதன் முதலில் டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் கங்குலி அவருக்கு வாய்ப்பு வழங்கியதைப் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்துள்ள ஹர்பஜன் சிங் “அவரை எனக்குக் கடவுள் அனுப்பி கையைப் பிடித்துக்கொள் என்று சொல்லியதாக நினைக்கிறேன். அவர் கைகளை நான் பிடித்துக்கொண்டேன். பிறகு நான் தொடர்ந்து என் வேலைகளைச் செய்துகொண்டே இருந்தேன். அதனால்தான் இப்பொழுது கிடைத்திருக்கும் பெயரைப் பெற்றேன். அவரும் ஒரு பெரிய தொடரை வென்று, கேப்டனாக நீடித்தார்” என்று கூறினார்.

மேலும் இதை விளக்கிப் பேசிய ஹர்பஜன் சிங் “அவர் என்னை நல்லவிதத்தில் ஆதரித்தார். அவர் எனக்கு வாய்ப்பு தந்தார். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இப்போது வரை இருக்கிறேன். ஆனால் உங்கள் கேரியரை நீட்டிப்பது உங்களின் சிறப்பான செயல்பாட்டில்தான் இருக்கிறது. கேப்டனால் உங்களுக்கு ஒரு வாய்ப்பைத்தான் வழங்க முடியும். நீங்கள் உங்கள் திறமையால்தான் அதை நீடித்துக்கொள்ள முடியும். அவர் சரியான நேரத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நான் சிறப்பாகச் செயல்பட்டேன். இதனால் இந்திய அணியில் என் இடமும் உறுதியானது. அவரும் ஒரு பெரிய டெஸ்ட் தொடரை வென்றார். அவர் எனக்கு வாய்ப்பு வழங்கி இருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று கேட்கறிர்கள்? அவர் டெஸ்ட் தொடரை இழந்திருப்பார். கேப்டனாக அவர் தொடர் முடியாமலும் போயிருக்கும்” என்று சிறப்பான பதிலைக் கூறினார்.

- Advertisement -