“ஏலத்துல யாரும் வாங்கலனா உங்க பையன நாங்க வாங்குவோம்” – தோனி கொடுத்த உத்தரவாதம்.. யார் இந்த வீரர்?

0
76535
Dhoni

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில், மொத்த அணிகளும் ஐபிஎல் விளையாடாத, இந்திய அணிக்கு தேர்வாகாத இளம் இந்திய வீரர்களை வாங்குவதற்கு பெரிய ஆர்வம் காட்டினார்கள்.

ராஜஸ்தான் சுபம் துபே, சென்னை சூப்பர் கிங்ஸ் சமீர் ரிஸ்வி, டெல்லி குமார் குஷ்கரா போன்ற இளம் வீரர்களை கோடிக்கணக்கில் கொடுத்து வாங்கியது. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஏலத்தில் மோதி, இதே போன்ற ஒரு இந்திய இளம் வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணி 3.60 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது.

அந்த வீரர் யார் என்றால், 21 வயதான ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ராபின் மின்ஸ். இவரை லெஃப்ட் ஹேண்ட் பொல்லார்டு என்று அழைக்கிறார்கள். இவரது வீடியோக்களும் மிக அதிரடியாக இருக்கின்றன.

- Advertisement -

மேலும் இவருடைய சிறப்பு என்னவென்றால் ஐபிஎல் தொடரில் இடம் பெறும் முதல் பழங்குடி இன வீரர் இவர்தான். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி தற்பொழுது, ஜார்க்கண்ட் விமான நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த இளம் வீரர் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்து இந்திய கிரிக்கெட்டை ஆட்சி செய்த மகேந்திர சிங் தோனியை தன்னுடைய ரோல் மாடலாக கொண்டிருக்கிறார். மேலும் அவரைப் போலவே அதிரடியாகவும் விளையாடுகிறார்.

இந்த நிலையில் விமான நிலையத்தில் பணியாற்றும் இவரது தந்தை மகேந்திர சிங் தோனி குறித்து கூறும் பொழுது “சில நாட்களுக்கு முன்பு நான் ராஞ்சி விமான நிலையத்தில் தோனி அவர்களை சந்தித்தேன். ஏலத்தில் ராபினை யாரும் எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம் என்று அவர் எனக்கு கூறியிருந்தார்!” என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படியான நிலையில்தான் இந்தியன் அவரது திறமையை ஏற்கனவே அறிந்து வைத்திருந்து ஏலத்தில் எடுக்க முயற்சி செய்த பொழுது, குஜராத் டைட்டன்ஸ் விடாமல் சென்று 3.60 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டது. இல்லையென்றால் இந்த வீரர் நிச்சயம் அடிப்படை விலையிலாவது சிஎஸ்கே அணியில் இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -