டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்தில் ஐசிசி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகப்படுத்தியது.
இதன் காரணமாக பெரும்பாலும் எல்லா நாடுகளும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முடிவு தருகின்ற வகையில் ஆடுகளங்களை அமைக்கின்றன. மேலும் விளையாடும் இரு அணிகளும் வெற்றியை நோக்கி விளையாடுகின்றன.
இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் இருக்கும் சவால்கள் ரசிகர்களுக்கு புதியபார்க்கும் பரவசத்தை கொடுக்கிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை டெஸ்ட் கிரிக்கெட் பக்கமும் மாறி இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில் இரண்டு பெரிய நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் பொழுது அதற்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருக்க செய்கிறது. குறிப்பாக இந்தியா விளையாடுகிறது என்றால் கொஞ்சம் கூடுதல் வரவேற்பு இருக்கும்.
தற்பொழுது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் மூன்று நாட்களில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரை சுற்றி நிறைய எதிர்பார்ப்பும், சூடான கருத்துகளும் பரிமாறப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கிலாந்து கடந்த சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல பேட்டிங்கில் அணுகி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் தாக்கி ஆடுவதை பேட்ஸ்மேன்கள் கைவிடாமல் விளையாடுகிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் க்கு என மட்டுமே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே அவர்கள் இந்தியாவில் என்ன செய்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களது இந்த விளையாட்டு முறைக்கு பாஸ்பால் என பெயரிடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” விராட் கோலியை எடுத்துக் கொண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய அரை சதங்களும் சதங்களும் மிக நெருக்கமாக இருக்கும். காரணம் அவர் தனக்கு கிடைத்த அரை சதங்களை எல்லாம் மிக அதிகபட்சமாக சதங்களாக மாற்றி இருக்கிறார். அவருடைய கன்வர்சேஷன் அபாரமாக இருக்கிறது. விராட் கோலி தற்பொழுது இருக்கும் பேட்டிங் பார்மில் தொடர்ந்தால், பாஸ்பாலை நாங்கள் விராட்பால் வைத்து முறியடிப்போம்.
இங்கிலாந்து கடந்த ஒன்று இரண்டு வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. இது ஒரு ஆக்ரோஷமான அணுகுமுறை ஆகும். இது பேட்ஸ்மேன்கள் தாக்கி விளையாடுவது குறித்தது. அவர்கள் எவ்வளவு கஷ்டமான நேரத்திலும் அதிரடியாகவே விளையாடுவார்கள். இந்திய சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர்களின் இந்த அணுகுமுறையை” பார்க்க சுவாரசியமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.