ஐபிஎல் வச்சி தப்பு கணக்கு போடாதீங்க… கில், விராட் கோலி எல்லாம் கிடையாது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆட்டநாயகன் இவர்தான் – முன்னாள் வீரர் உறுதி!

0
12508

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியை காப்பாற்றுவது இவரால் மட்டுமே முடியும். இதில் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் இரண்டாம் பட்சம் தான் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் வேணுகோபால் ராவ்.

2021-23 உலக பெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் டெஸ்ட் தொடர்கள் முடிவடைந்து புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளன.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வருகிற ஜூன் 7ஆம் தேதி துவங்கி 11ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இம்முறை நடைபெறுகிறது. கடந்த முறையும் பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றது அதில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பைனலில் மோதுகிறது. பைனலில் பங்கேற்கும் இரு அணிகளின் பட்டியல் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுவிட்டது. முன்னணி வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, கேஎல் ராகுல் போன்றோர் காயம் காரணமாக இதில் விளையாடவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியா போன்ற பலம்மிக்க அணியை சமாளித்து, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வெல்வதற்கு யார் சிறப்பாக செயல்பட வேண்டும்? எந்த வீரர் திருப்புமுனையாக இருப்பார்? என்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் வேணுகோபால் ராவ்.

- Advertisement -

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலிய அணியைப்போல நம்மிடமும் வேகப்பந்துவீச்சு அட்டாக் சிறப்பாக இருந்திருக்கிறது. முகமது சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த முறை இங்கிலாந்திற்கு சென்று விளையாடியபோது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

டி20 போட்டிகளை விளையாடிவிட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு செல்கிறோம். அதற்கு வீரர்கள் விரைவாக தகவமைத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். கில் மற்றும் விராட் கோலி இருவரும் மிகச்சிறந்த பார்மில் இருக்கின்றனர். ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் விளையாடிய விதத்தை வைத்து குறைத்து மதிப்பிட வேண்டாம்.

கடந்த முறை ஆஸ்திரேலியா அணியை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார். சதம் அடித்தார். இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் அவர் நன்றாக செயல்படக்கூடியவர் என்பதால், இம்முறை பைனலில் இந்திய அணிக்கு மிக முக்கிய வீரராக இருக்கப் போகிறவர் ரோகித் சர்மா என கருதுகிறேன். அவருக்கு ஃபார்ம் என்பது கிடையாது. ஒரு போட்டியில் தனது ஆட்டத்தை மாற்றி விடுவார்.” என்றார்.