கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

மகளிர் உலககோப்பை.. ஸ்மிருதி மந்தானா, பிரதிகா அபார சதம்.. நியூசி.க்கு எதிராக இந்திய மகளிர் அணி ரன் குவிப்பு

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. தற்போது அரையிறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

- Advertisement -

எனவே நான்காவது இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்தை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும் என்ற நெருக்கடியில் இந்தியா களமிறங்கியது. நவிமும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

நல்ல பார்ட்னர்ஷிப்:

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தானா ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த தொடர் முழுவதும் முதலில் தடுமாறிய இந்த ஜோடி முக்கிய கட்டத்தில் ரன்களை குவித்து வந்தது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது.

குறிப்பாக ஸ்மிருதி மந்தானா 10 பவுண்டரி, நான்கு சிக்ஸர்களை அடித்து அசத்தினார். 88 பந்துகளில் ஸ்மிருதி மந்தானா தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 109 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் பிரதிகா ராவல் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

பிரதிகா ராவல் சதம்:

122 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த அவர் அடுத்த 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து 134 பந்துகளில் 122 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். இதில் 13 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். இதைப் போன்று மூன்றாவது வீராங்கனையாக களமிறங்கிய ஜெமிமா  51 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார்.

இதையும் படிங்க: தோல்விக்கு இதான் காரணம்.. ரோகித் ஆரம்பத்தில் தடுமாறினார்.. பெரிய ஆட்டத்தை மிஸ் பண்ணிட்டார் – கேப்டன் கில் பேச்சு

கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் 10 ரன்களை எடுத்திருந்தார். இருவரும் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய மகளிர் அணி 48 ஒவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்துள்ளது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்தியா பெரிய இலக்கை நிர்ணயித்திருப்பதால், நியூசிலாந்து அணிக்கு இந்த போட்டியில் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
எனினும் மழை பெய்யாமல் இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -
Published by