ஐசிசி டி20 தரவரிசை.. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடம் பிடித்து அசத்தல்.. மூன்று பிரிவிலும் இந்தியர்கள் ஆதிக்கம்

0
62

இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து விக்கெட் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் ஆசியக் கோப்பைத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் அபாரமாக பந்துவீச்சு மூலம் ஐசிசி ஆண்கள் டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

34 வயதான அவர், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவி பிஷ்ணோய்க்கு பிறகு இந்த சாதனையை படைத்துள்ளார். UAE-க்கு எதிராக 2 ஓவர்களில் 4 ரன்களுக்கு ஒரு விக்கெட் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் மூன்று இடங்கள் முன்னேறினார்.

- Advertisement -

ஐசிசி டி20 தரவரிசை:

பிப்ரவரி 2025-ல் இரண்டாவது இடத்தை அடைந்திருந்த வருண், மார்ச் முதல் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபியை முந்தினார்.ஆசியக் கோப்பையில் விளையாடும் பல வீரர்களும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர். இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா ஆறு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் சுஃபியான் முகீம் 4 இடங்கள் முன்னேறி 11வது இடமும், அப்ரார் அகமது 11 இடங்கள் முன்னேறி 16வது இடம், இந்தியாவின் அக்ஸர் படேல் ஒரு இடம் முன்னேறி 12வது இடம், குல்தீப் யாதவ் 16 இடங்கள் முன்னேறி 23வது இடம், ஆப்கானிஸ்தானின் நூர் அகமது 8 இடங்கள் முன்னேறி 25வது இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா 4 இடங்கள் முன்னேறி 40வது இடம், வங்கதேசத்தின் தன்ஜிம் ஹசன் 5 இடங்கள் முன்னேறி 42வது இடம், இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 இடங்கள் முன்னேறி 13வது இடம், தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன் 5 இடங்கள் முன்னேறி 38வது இடம் ஆகியோரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அபிஷேக் தொடர்ந்து முதலிடம்:

பேட்டிங் தரவரிசையில், இந்தியாவின் இடது கை தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா முதலிடத்தில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். UAE-க்கு எதிராக 16 பந்துகளில் 30 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 13 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து, 55 புள்ளிகளை பெற்று 884 புள்ளிகளை எட்டியுள்ளார்.இங்கிலாந்து தொடக்க ஜோடியான பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர், முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.

சால்ட்டின் 60 பந்துகளில் 141 ரன்கள் இங்கிலாந்து வீரரால் T20I-யில் மிக வேகமாக அடிக்கப்பட்ட சதமாகும், பட்லரின் 30 பந்துகளில் 83 ரன்கள் 794 புள்ளிகளைப் பெறவைத்து முதல் முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வந்தது. மற்ற பேட்ஸ்மேன்களில், இலங்கையின் பதும் நிஸ்ஸங்க ஒரு இடம் முன்னேறி 6வது இடம், தென்னாப்பிரிக்காவின் டிவால்ட் ப்ரெவிஸ் 2 இடங்கள் முன்னேறி 11வது இடம், ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 2 இடங்கள் முன்னேறி 19வது இடத்தை பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: சூரிய குமாரை பன்றியென சொன்ன யூசுப்.. இதுதான் பாகிஸ்தான் குணமா? – மதன்லால் கடுமையான விமர்சனம்

தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் 10 இடங்கள் முன்னேறி 30வது இடம், இந்தியாவின் ஷுப்மன் கில் 4 இடங்கள் முன்னேறி 39வது இடம், பாகிஸ்தானின் சாஹிப்ஸதா ஃபர்ஹான் 18 இடங்கள் முன்னேறி 55வது இடத்தை பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -