ஐசிசி டி20 ரேங்கிங்.. ருதுராஜ் எதிர்பார்க்காத உயர்வு.. ஒரேஒரு இந்திய பவுலர்.. அதிரடி மாற்றங்கள்!

0
848
Ruturaj

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைய, தற்போது அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக, உலக கிரிக்கெட் அதிக டி20 கிரிக்கெட்டை விளையாட இருக்கிறது.

இந்த வகையில் உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. இந்தத் தொடரை இந்திய அணி நான்குக்கு ஒன்று என அபாரமாக விளையாடி கைப்பற்றியது.

- Advertisement -

இந்தத் தொடர் முடிவடைந்த பிறகு ஐசிசி டி20 பேட்ஸ்மேன் மற்றும் பவுலர், அணிகள் என தங்களுடைய தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. சூரியகுமார் ஒருவர் மட்டுமே பேட்டிங்கில் முதல் 10 இடத்தில் இருக்க தற்பொழுது அதில் ருத்ராஜ் வந்து சேர்ந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக ருத்ராஜ் விளையாடினார். மேலும் அவர் அதில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் விளாசி அசத்தினார்.

இதன் காரணமாக அவர் 56 இடங்கள் கிடுகிடுவென்று உயர்ந்தது தற்போது ஏழாவது இடத்துக்கு உயர்ந்திருக்கிறார். சூரியகுமார் யாதவ் எப்பொழுதும் போல முதல் இடத்திலேயே நீடித்து வருகிறார். முதல் 10 இடங்களில் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் இந்தியா 881 புள்ளிகள்
முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் 787 புள்ளிகள்
எய்டன் மார்க்ரம் தென் ஆப்பிரிக்கா 756 புள்ளிகள்
பாபர் அசாம் பாகிஸ்தான் 734 புள்ளிகள்
ரைலி ரூசோவ் தென் ஆப்பிரிக்கா 702 புள்ளிகள்
டேவிட் மலான் இங்கிலாந்து 691 புள்ளிகள்
ருத்ராஜ் இந்தியா 673 புள்ளிகள்
ஜோஸ் பட்லர் இங்கிலாந்து 666 புள்ளிகள்
ரீசா ஹென்றிக்ஸ் தென் ஆப்பிரிக்கா 657 புள்ளிகள்
கிளன் பிலிப்ஸ் நியூசிலாந்து 637 புள்ளிகள்

சர்வதேச டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 692 புள்ளிகள் உடன் ரசீத் கான் முதல் இடத்தில் இருக்கிறார். இதில் ஒரே ஒரு இந்திய பந்துவீச்சாளராக ரவி பிஸ்னாய் 665 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது!