ஐசிசி டி20 பேட்டிங் ரேங்கிங்.. டாப் 10ல் ஜெய்ஸ்வால்.. ரோகித் கோலி இடம் என்ன?

0
6066
ICT

இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் உள்நாட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இலங்கை உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடுகிறது. நியூசிலாந்து உள்நாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்த ஆறு நாடுகளும் தற்போது டி20 கிரிக்கெட் தொடர்களில் இந்த ஆறு நாடுகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே மோதிக் கொள்ளும் டி20 தொடர் மட்டும் முடிவு தெரிவதற்காக மூன்றாவது போட்டிக்கு செல்கிறது. மற்ற இரண்டு டி20 தொடர்களையும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வென்றிருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையை வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய அணியில் இருந்து ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் இருவரும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து, முதல் முறையாக தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து இருக்கிறார்கள்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தற்பொழுது 44வது இடத்திலும், இஷான் கிஷான் 51-வது இடத்திலும், சிவம் துபே 58 வது இடத்திலும், சுப்மன் கில் 60வது இடத்திலும் இருக்கிறார்கள்.

மேலும் டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 726 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல் இடத்தில் இருந்த இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் 666 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்திலும், 667 புள்ளிகள் உடன் அக்சர் படேல் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரை தவிர முதல் பத்து இடங்களில் வேறு எந்த இந்திய பந்துவீச்சாளர்களும் இல்லை.

- Advertisement -

ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள்.

896புள்ளிகள் – சூர்யகுமார் யாதவ்
802 புள்ளிகள் – பிலிப் சால்ட்
775 புள்ளிகள் – முகமது ரிஸ்வான
763 புள்ளிகள் – பாபர் அசாம்
755 புள்ளிகள் – எய்டன் மார்க்ராம்
739 புள்ளிகள் – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
689 புள்ளிகள் – ரைலி ரோசோவ்
680 புள்ளிகள் – ஜோஸ் பட்லர்
661 புள்ளிகள் – ருதுராஜ் கெய்க்வாட்
660 புள்ளிகள் – ரீசா ஹென்ட்ரிக்ஸ்