2021 டி20 உலக கோப்பையின் சிறந்த 12 பேர்கள் இவர்கள் தான் – ஒரு இந்திய வீரர் கூட இல்லாமல் ஐசிசி வெளியிட்ட அணி

0
139
Most Valuable XI of T20 Worldcup 2021

டி20 உலக கோப்பை தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. பலரும் இந்தியா அல்லது இங்கிலாந்து போன்ற நாடுகள் கோப்பையை வெல்லும் என்று தனித்த நிலையில் பலருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து, இந்தியா என இரண்டு பெரிய நாடுகளுமே இறுதிப் போட்டிக்கு கூட தகுதி பெறவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற தவறியது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி தனது முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் விளையாடிய சிறந்த 12 பேர்கொண்ட அணியை கிரிக்கின்ஃபோ வெளியிட்டுள்ளது. அந்த அணியின் முதல் துவக்க வீரராக ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது துவக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக இங்கிலாந்து அணியின் பட்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியின் மூன்றாம் நிலை வீரராகவும் கேப்டனாகவும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் உள்ளார். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் பாபர் அசாம் முதலிடம் வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இலங்கை அணியஅணியின் அசலங்கா இந்த அணியின் 4-வது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசலங்கா இந்தத் தொடரில் 231 ரன்கள் எடுத்துள்ளார்.

- Advertisement -

ஆல்ரவுண்டர்களாக மார்க்ரம் மற்றும் மொயீன் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு வீரர்களுமே அவர்களது அணிக்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டு ரூபத்திலும் மிகவும் உதவியாக இருந்தனர். சுழற்பந்து வீச்சாளராக இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இரண்டு வீரர்களான ஹசரங்கா மற்றும் சாம்ப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளராக நியூசிலாந்து அணியின் போல்ட், ஆஸ்திரேலிய அணியின் ஹேசல்வுட் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் நோர்க்கியா உள்ளனர்.

ஐசிசி வெளியிட்ட சிறந்த டி20 உலகக்கோப்பை அணி – வார்னர், பட்லர், பாபர், அசலங்கா, மார்க்ரம், மொயீன், ஹசரங்கா, சாம்ப்பா, போல்ட், ஹேசல்வுட், நோர்க்கியா.