டி20 உ.கோ அரை இறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது.. ஐசிசி செய்த மாற்று ஏற்பாடு.. காரணம் என்ன?

0
764
ICC

நடப்பு ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரண்டு நாடுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இரண்டாவது அரை இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது என ஐசிசி அறிவித்திருக்கிறது.

டி20 உலகக் கோப்பை ஜூன் ஒன்றாம் தேதி துவங்குகிறது. இதன் இரண்டு சுற்று போட்டிகள் ஜூன் 25ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கு அடுத்து ஜூன் 27 ஆம் தேதி இரண்டு அரை இறுதி போட்டிகள் நடைபெறுகின்றன. இதில்தான் இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது எனக் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஜூன் 27 ஆம் தேதி பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு முதல் அரை இறுதி போட்டி நடைபெறுகிறது. இதே நாளில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானா பிராவிடன்ஸ் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியின் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூன் 27 ஆம் தேதி பிரையன் லாரா மைதானத்தில் காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறும் இரவு 8 மணி என்கின்ற நேரத்தில் இதற்கான ரிசர்வ் டே அமைகிறது.

அதே சமயத்தில் ஜூன் 27 இரவு 8 மணிக்கு துவங்குகின்ற இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்படவில்லை. மாறாக கூடுதலாக 250 நிமிடங்கள் அதாவது நான்கு மணி நேரம் பத்து நிமிடங்கள் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்திற்குள் போட்டி நடந்து முடிய வேண்டும். இல்லையென்றால் சூப்பர் 8 சுற்றில் முன்னிலை பெற்ற அணி எதுவோ அந்த அணி வென்றதாக அறிவிக்கப்படும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி சிஎஸ்கே போட்டியில் மழை வாய்ப்பு.. ரத்தானால் யாருக்கு ப்ளே ஆப்.. தோனி ஃபேர்வெல் சிறப்பாக நடக்குமா?

இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெற இருப்பதால், ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு இரண்டாவது அரையிறுதி போட்டி துவங்குகின்ற காரணத்தினால், இறுதிப்போட்டி விளையாடுவதற்கு நடுவில் நேரம் கிடைக்காது. இதன் காரணமாகவே இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுக்கப்படாமல், கூடுதலாக நான்கு மணி நேரம் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.