ஐசிசி அறிவித்த 2024ன் சிறந்த ODI அணி.. இந்திய வீரர்கள் யாருக்கும் இடமில்லை.. 3 பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இடம்

0
70

ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளையாடும் வீரர்களை ஐசிசி தேர்வு செய்து ஆண்டின் சிறந்த அணியாக அறிவிக்கும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஐசிசி தற்போது ஒரு அணியை அறிவித்திருக்கிறது.

இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு இந்திய வீரர் கூட ஐசிசி அறிவித்த அணியில் இடம்பெறவில்லை. நடப்பாண்டில் சிறப்பாக செயல்பட்ட பும்ரா கூட இந்த அணியில் இடம் பெறவில்லை. இதற்கு காரணம் இந்திய அணி கடந்த 2024 ஆம் ஆண்டு மூன்றே மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தான் இலங்கைக்கு எதிராக விளையாடியது.

- Advertisement -

சிறந்த ஒருநாள் அணியின் பேட்டிங் வரிசை:

இதில் பூஜ்ஜியத்துக்கு மூன்று என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்த போட்டியிலும் பும்ரா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐசிசி அறிவித்த சிறந்த ஒரு நாள் அணியை தற்போது பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில் தொடக்க வீரர்களாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹம்துல்லா குர்பாசும், பாகிஸ்தானை சேர்ந்த சயிம் அயூப்பும்  இடம்பெற்று இருக்கிறார்கள்.

அயூப் 9 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் எடுக்க, குர்பாஸ் 11 போட்டிகளில் விளையாடி 531 ரன்கள் எடுத்திருந்தார். மூன்றாவது வீரராக இலங்கை அணியின் பதும் நிசாங்கா இடம் பெற்று இருக்கிறார். இவர் 12 போட்டிகளில் விளையாடி 694 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இலங்கை அணி கேப்டன் அசலங்கா இருக்கிறார்.இவர் 17 போட்டியில் விளையாடி 742 ரன்களை அடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த பட்டியலில்  ஐந்தாவது இடத்தில் இலங்கை வீரர் குசல் மெண்டிஸ்  இருக்கிறார். இவர்  17 போட்டிகளில் 742 ரன்கள் அடித்திருக்கிறார். இவர் விக்கெட் கீப்பராக இந்த அணியில் செயல்படுவார். ஆறாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரூதர்போர்ட் இருக்கிறார். இவர் 9 போட்டிகளில் 429 ரன்கள் அடித்திருக்கிறார்.

சிறந்த ஒருநாள் அணியின் பவுலர்கள் யார்?

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அகமதுல்லா உமர்சாய் இருக்கிறார். இவர் பேட்டிங்கில் சராசரியாக 52 ரன்களும், பந்துவீச்சில் 12 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஹசரங்கா இடம் பிடித்திருக்கிறார்.

பத்து போட்டிகளில் விளையாடியுள்ள ஹசரங்கா 26 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி இருக்கிறார். இவர் 6 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தில் மற்றொரு பாகிஸ்தான் வீரரான ஹாரிஸ் ரவுஃப் இருக்கிறார். இவர் எட்டு போட்டியில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் பட்டியலில் 11வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் அல்லாஹ் கபன்சார் இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள், நான்கு இலங்கை வீரர்கள், மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -