ரிஷப் பண்ட் அதை கேட்டாலும் செய்வாரு.. ஆனா தோனி விஷயம் கொஞ்சம் கஷ்டம் – இயான் ஸ்மித் பேட்டி

0
142
Rishabh

இந்திய அணியின் 26 வயதான இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயான் ஸ்மித் மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி மீண்டும் வந்து விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதம் அடித்த காரணத்தினால், அவர் குறித்து நிறைய வீரர்கள் பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில் இயான் ஸ்மித் ரிஷப் பண்ட் எதையும் செய்யக் கூடியவர் என பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

அஜித் அகர்கர் காட்டிய நம்பிக்கை

கடந்த வருடம் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து மனவெறுமை காரணமாக இஷான் கிஷான் வெளியேறினார். இதைத் தொடர்ந்து அவரை அதிரடியாக இந்திய தேர்வுக்குழு புறக்கணித்தது. அவரை இந்திய அணிக்கு அங்கிருந்து எந்த ஒரு வடிவத்திலும் தேர்வு செய்யவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ரிஷப் பண்ட் பற்றி பேசி இருந்த பொழுது அவர் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா, நாடுகளில் டெஸ்ட் சதங்கள் அடித்தவராக இருக்கிறார் என்றும், அவர் இருக்கும் பொழுது முதலில் அவருக்கே முன்னுரிமை கொடுப்போம் என்றும் கூறியிருந்தார். அந்த அளவிற்கு அவரை அணி நிர்வாகம் நம்புகிறது.

- Advertisement -

ரிஷப் பண்ட் எதையும் செய்வார்

இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசி இருக்கும் இயான் ஸ்மித் கூறும் பொழுது “எனக்கு ரிஷப் பண்ட்டை மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவருடைய மனோபாவம் மிகவும் அருமையாக இருக்கும். அவர் எப்பொழுதும் சண்டையிலிருந்து ஓடி ஒளிய மாட்டார். நீங்கள் அவரை துவக்க ஆட்டக்காரராக வரவேண்டும் என்றால் வருவார். ஐந்தாவது இடத்தில் இறங்க வேண்டும் என்றாலும் இறங்குவார். அவர் உலகம் கண்டிராத விக்கெட் கீப்பர் கிடையாது. ஆனால் சிறந்தவர்!”

“எனக்கு ஒரு கிரிக்கெட் வீரராக ரிஷப் பண்ட் மிகவும் பிடித்தவர். அணியில் அவருக்கு ஒரு பெரிய ரோல் இருக்கிறது அதே சமயத்தில் அவர் தோனி போன்ற ஒரு பெரிய வீரரின் இடத்தை நிரப்ப வந்திருக்கிறார். நீங்கள் ஹீரோ காரணிகள் பற்றி பேசினால் ரிஷப் பண்ட் தோனியை தாண்டி செல்வது கடினமாக இருக்கும்”

இதையும் படிங்க :

“அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்ததும், நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல முறையில் செயல்படுத்த தொடங்கும் பொழுது, உங்கள் வாழ்க்கை வியத்தகு முறையில் மாற்றம் அடையும். பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் தங்கள் எப்படி வர வேண்டும் என்று விரும்புவதை விட நீங்கள் பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி விடுவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -