சுப்மன் கில் இன்னும் ஒரு கேப்டனாக முழுமையாக வளர்ந்து விடவில்லை என இயான் பிஷப் கூறியிருக்கிறார். மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா திரும்பி வருவது சுப்மன் கில்லுக்கு நல்லதாகவே அமையும் என்றும் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு இந்திய நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்கு திரும்புகிறார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடமிருந்து பறித்து சுப்மன் வில்லுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கேப்டனாக முதல் தொடர் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதன்முறையாக இந்திய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அந்தத் தொடரில் அவர் மிகச் சிறப்பாக விளையாடி நான்கு சதங்கள் உடன் 750 ரன்கள் எடுத்தார். ஆனால் தொடர் இரண்டுக்கு இரண்டு என சமனில் முடிந்தது.
இந்த நிலையில் உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என முழுமையாக கைப்பற்றியது. இது கேப்டனாக சுப்மன் கில்லுக்கு முதல் தொடர் வெற்றியாக அமைந்திருக்கிறது. இந்தத் தொடரிலும் அவர் ஒரு சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கில் அருகில் கூட இல்லை
இதுகுறித்து இயான் பிஷப் பேசும் பொழுது “கில் நல்ல முறையில் இருப்பார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் வந்து நிச்சயம் கில்லுக்கு உதவுவார்கள். கில் தன்னுடைய வேலையில் நிச்சயம் வளர்வார். ஆனால் தற்போது அவர் முழுமையாக தயாராகிவிட்ட பட்டியலுக்கு அருகில் கூட கிடையாது. ஒரு கேப்டனாக அவர் வளர்வதற்கு மக்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் தொடர்ந்து வளர்வார்”
இதையும் படிங்க : செலெக்டர்ஸை பார்த்து வீரர்கள் பயப்படனுமா?.. உடனடியா தேர்வுக்குழுவுல இந்த மாற்றத்தை கொண்டு வரணும் – ரகானே வலியுறுத்தல்
“கில்லுக்கு அணியை வழிநடத்தும் திறமையும் குணமும் இருக்கிறது. ஆனால் கேப்டன்சி மற்றும் திட்டங்களில் வளர்வதற்கு ஒன்று இரண்டு சீசன்கள் தேவைப்படும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு மூத்த வீரர்களிடம் இருந்தும் அவருக்கு நிச்சயம் உதவிகள் கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்.






