இந்திய அணியில் அனைத்து பார்மெட்டிலும் இந்த இளம் வீரர் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன் – மனம் திறந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

0
224

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த ஆண்டு அவர் வீசிய வேகத்தை விட இந்த ஆண்டு அதி வேகமாக வீசி வருகிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது. நாளை முதல் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கின்ற ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் இந்திய அணிக்கு முதல் முறையாக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

அணியில் ஒரே நேரத்தில் அனைவரையும் விளையாட வைக்க முடியாது

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடிடம் உம்ரான் மாலிக் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தற்போது ஒரு சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அவர் அதிவேகத்தில் பந்து வீசினார். அவருக்கு விளையாட எவ்வளவு நேரம் கொடுக்க முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எங்களிடம் ஒரு பெரிய அணி உள்ளது, எனவே ஒரு போட்டியில் ஒரேடியாக அனைவரையும் சேர்க்க முடியாது,” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் ஒரு வீரர் இடத்தில் இருந்து தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவது தான் என்னுடைய நோக்கம். அதற்கான கால அவகாசம் ஒவ்வொரு வீரருக்கும் வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அனியில் தற்போது சீனியர் பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார்,ஹர்ஷால் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் இருக்கையில் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் பந்து வீச்சாளர்களும் அணியில் இருப்பது அணியின் தரத்தையும், பலத்தையும் விரிவடையச் செய்கிறது. இது மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்று கூறியுள்ளார்.

அவர் அனைத்து வகை கிரிக்கெட் பார்மெட்டிலும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன்

- Advertisement -

கடைசியாக உம்ரான் மாலிக் தனது பந்து வீச்சின் மூலமாக என்னை ஆச்சரியப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் ( உம்ரான் மாலிக் போன்ற) வேகமாக பந்து வீசுயது எனக்கு சந்தோசத்தை கொடுத்தது. மாலிக் நிறைய போட்டிகளில் விளையாடுவதன் மூலமாக சிறந்த வீரராக அவர் உருவெடுப்பார். அவர் இதே நிலையில் இருக்காமல் இந்திய அணிக்கு அனைத்து வகை கிரிக்கெட் பார்மெட்டிலும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அதை காண தான் மிக ஆர்வமாக உள்ளதாகவும் ராகுல் டிராவிட் நம்மிடம் கூறியிருக்கிறார்.