“விராட் கோலி ஏன் விளையாடலனு சீக்கிரம் கண்டுபிடிச்சு விடுவேன்.. ஆனால்..” – ஏபி.டிவில்லியர்ஸ் முக்கிய கருத்து

0
131
Virat

நாளை தொடங்க இருக்கும் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு, ரசிகர்களிடையே நிலவி வந்த பெரிய எதிர்பார்ப்பில் கொஞ்சம் தற்பொழுது சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இந்த நீண்ட ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் விராட் கோலி நிறைய ரன்கள் குவித்து மகிழ்ச்சி படுத்துவார் என்று இந்திய ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார். அவருடைய இடத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வலதுகை பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

விராட் கோலி தான் இரண்டு டெஸ்ட்களில் விளையாட முடியாததற்கான காரணத்தை அணி நிர்வாகம் மற்றும் கேப்டனிடம் எடுத்து கூறி இருக்கிறார் என்று பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது.

குறிப்பாக விராட் கோலி தன் குடும்பத்திற்காக எடுத்திருக்கும் முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும், அது குறித்து அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் விராட் கோலியின் இந்த முடிவை மதிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்கள். கிரிக்கெட் தொடரை விட குடும்பம் முக்கியம் என்று நாசர் ஹுசைன் கூறி இருக்கிறார்.

இதற்கு முன் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி முகாமில் இருந்து இதேபோல் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி லண்டன் புறப்பட்டு சென்றார். தற்பொழுதும் இப்படி தனிப்பட்ட குடும்ப காரணத்திற்காக தொடரை விட்டு விலகி இருக்கிறார். அவர் விளையாட விட்டாலும் கூட, அவருக்கு ஏதும் பிரச்சனைகள் இருக்குமா? என்று ரசிகர்கள் கவலை கொள்கிறார்கள்.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நெருங்கிய நண்பரான ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “இன்னும் என்ன நடந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை. விரைவில் தெரிந்து கொள்வோம் என்று நம்புகிறேன். தனிப்பட்ட காரணங்கள் என்று பேசினால், நிச்சயம் ஏதாவது நியாயமானதாக இருக்கும்.

இதையும் படிங்க : “தப்பு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மேல.. இப்படி அழுகிறதே வேலை” – வெங்கடேஷ் பிரசாத் கடுமையான விமர்சனம்

விராட் கோலியும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். இதனால் ஒருவேளை அவரும் கொஞ்சம் சோர்வாக இருக்கலாம். இல்லை குடும்ப விஷயமாகவும் இருக்கலாம். இது குறித்து நான் விரைவில் கண்டுபிடித்து விடுவேன். ஆனால் நான் அதை உங்களிடம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவருடைய நட்பு எனக்கு மிக முக்கியமானது” என்று கூறி இருக்கிறார்.