“எல்லா டீம் கேப்டன் பிளேயர்ஸ்க்கு நான் ஒரு உத்தரவாதம் தரேன்..!” – கேப்டன் ரோகித் சர்மா பேச்சு!

0
5674
Rohit

இந்தியாவில் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நாளை துவங்குகிறது. இதற்காக பத்து அணிகளின் கேப்டன்களும் சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட அனைத்து அணிகளின் கேப்டன்களும் பல்வேறு கேள்விகளுக்கு தங்களுடைய பதில்களை தெரிவித்தார்கள்.

- Advertisement -

கடந்த முறை இங்கிலாந்தில் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்ற பொழுது, உலகக் கோப்பை தொடருக்கான துவக்க நிகழ்வு சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.

ஆனால் இந்த முறை உலகக் கோப்பையில் துவக்க நிகழ்ச்சி எதுவும் நடத்தப்படாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டாக கிரிக்கெட் இருக்கிறது. எனவே உலக கோப்பையை சுற்றி இந்திய மக்களின் எதிர்பார்ப்பும் உற்சாகமும் எனக்கு ஆச்சரியமானது கிடையாது.

- Advertisement -

வீரர்களுக்கு நல்ல சுதந்திரம் கொடுத்தால் அவர்கள் தங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்துவார்கள். எனவே வீரர்கள் இயல்பாக அவர்களது சொந்த விளையாட்டை விளையாட ஒரு கேப்டனாக சுதந்திரம் கொடுப்பது முக்கியம் என்று நான் நம்புகிறேன்.

நாங்கள் சில நாட்கள் ஓய்வு எடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்றால் இங்கு வெப்பம் அதிகம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வது சிரமமான விஷயம். எனவே எங்களுக்கு கிடைத்த ஓய்வு நல்லவிதமான ஒன்று.

நாங்கள் எங்கள் திட்டங்களை எங்கள் திறமையின் மூலம் சிறப்பாக செயல்படுத்த பார்க்கிறோம். இதைத்தான் இந்த உலகக் கோப்பையில் நாங்கள் செய்ய எதிர்பார்க்கிறோம். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்துவதற்கு பெருமைப்படுகிறேன் நன்றி உடன் இருக்கிறேன். இது எனக்கு மிகவும் உற்சாகமாகவும் கௌரவமாகவும் இருக்கிறது.

நான் அனைத்து அணிகளின் கேப்டன் மற்றும் வீரர்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். இந்தியாவில் நடக்க இருக்கும் இந்த உலகக் கோப்பை மிகவும் அற்புதமான ஒன்றாக இருக்கும். இங்கு போட்டியை மிகவும் விரும்புவார்கள். ஒவ்வொரு போட்டிக்கும் ரசிகர்களின் வருகை மிகச் சிறப்பாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!