“எங்களால் இந்தியாவை கட்டாயம் ஜெயிக்க முடியும்.. அதுக்கு இது நடந்தா போதும்!” – பங்களாதேஷ் பயிற்சியாளர் உறுதியான நம்பிக்கை!

0
1372
ICT

இன்று உலகக்கோப்பை தொடரில், தொடரை நடத்தும் இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரம் புனே மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகிறது.

பங்களாதேஷ் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

பங்களாதேஷ் இந்திய அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக மோதிக்கொண்ட நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று இருக்கிறது. தற்பொழுது இதன் காரணமாக இந்த போட்டிக்கு முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறது.

பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் ஹதிருசிங்கா இந்த போட்டி குறித்து தன்னுடைய நீண்ட பேட்டியை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது “சமீபக் காலங்களில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். அதே சமயத்தில் உலகக்கோப்பை என்று வரும் பொழுது இது வித்தியாசமான ஒன்றாக இருக்கும். நான் சொன்னது போல நாங்கள் அவர்களுக்கு எதிராக ஒரு முழுமையான ஆட்டத்தை பெறுவோம் என்று நம்புகிறோம். அதை நாங்கள் செய்ய வேண்டும்.

இந்த போட்டியில் இந்திய அணி இன்பார்ம் அணியாக இருக்கும். அவர்கள் அவர்களுடைய தரத்திற்கு கொஞ்சம் விளையாடாமல் போனால், நாங்கள் எங்களுடைய தரத்திற்கு விளையாடினால், நிச்சயம் எங்களால் இந்திய அணியை வீழ்த்தி விட முடியும். இதை எங்களால் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

- Advertisement -

நாங்கள் நன்றாக தொடங்கினால் இந்திய அணிக்கு எதிராக மிகச்சிறப்பாகவே முடித்திருக்கிறோம். எனவே எங்களுக்கு நல்ல தொடக்கம் மிகவும் முக்கியம். இந்திய அணிக்கு எதிராக பெற்ற வெற்றிகள் எங்களுடைய ஞாபகத்தில் இருக்கிறது. நாங்கள் அந்த நாட்களுக்கு இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும்.

கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை வீழ்த்தி இருக்கின்றன. இதன் மூலம் உலகக்கோப்பை அரை இறுதிக்கான வாய்ப்புகள் திறந்து இருக்கிறது. இது எங்களை உற்சாகப்படுத்தக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

எனவே நாங்கள் இதன் மூலம் அனைவரும் உத்வேகம் பெற்று இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் ஆறு ஆட்டங்கள் மீதம் இருக்கிறது. நாங்கள் அந்த ஆறு ஆட்டங்களையும் வெல்ல முடியும் என்று நினைக்கிறோம். அதுதான் நாங்கள் இந்த போட்டிக்கு வருவதற்கான உத்வேகம்!” என்று கூறியிருக்கிறார்!