“டெஸ்ட் கேப்டன்சியை விராட் கோலிகிட்ட கத்துக்கிட்டேன்!” – மீண்டும் வைரலாகும் ரோகித் சர்மா பேச்சு!

0
758
Virat

இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தை எடுத்துக் கொண்டால் அதில் மிகச்சிறந்த மாற்றங்களை உருவாக்கிய கேப்டனாக விராட் கோலிதான் முதலில் இருப்பார்.

விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் புகுத்திய உடல்தகுதி பற்றிய விழிப்புணர்வு, பல்வேறு மாற்றங்களை உண்டாக்கியது. அதில் மிக முக்கியமான மாற்றம் வேகப்பந்துவீச்சாளர்கள் அற்புதமான செயல் திறனுக்கு வந்தார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை மட்டும் அல்லாமல் டெஸ்ட் தொடரையும் வெல்லும் அளவுக்கு வலிமை கொண்டதாக மாறியது.

முதன்முதலாக விராட் கோலி காலத்தில்தான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு 100 சதவீதம் சாத்தியம் கொண்ட அணியாக உருவானது என்பது கடந்த கால வரலாறு.

- Advertisement -

அவருக்கு இதற்கான முழு அங்கீகாரமும் இருக்கிறது. மேலும் இது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதுவராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக, அவர் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது விராட் கோலி கேப்டன்சியை குறிப்பிட்டு பேசியிருந்தார். அப்போது அவர் பேசிய விஷயம் தற்பொழுது மீண்டும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இதேபோல் தென் ஆப்பிரிக்க தொடரில் தான் 2021 ஆம் ஆண்டு வெள்ளைப் பந்து கிரிக்கெட் ரோகித் சர்மா கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா விராட் கோலி கேப்டன்சி பற்றி இதற்கு முன்பு பேசி இருந்த பொழுது “நீங்கள் சரியாக ஒரு ஃபீல்டு செட் செய்து விட்டால், விராட் கோலி கேப்டனாக இருக்கும் சமயத்தில் நான் விளையாடிய பொழுது கவனித்தது என்னவென்றால், நீங்கள் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல், விக்கெட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து அழுத்தத்தை மட்டும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். விராட் கோலியின் கேப்டன்ஷியில் நான் கற்றுக் கொண்ட விஷயம் இதுதான்.

அதைத்தான் நானும் இப்போது செய்ய முயற்சி செய்கிறேன். அந்த அழுத்தத்தை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். விக்கெட் பற்றிய எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தக் கூடாது. விக்கெட் என்பது ஒவ்வொரு பந்திலும் நமக்கு கிடைக்க கூடிய விஷயம் இல்லை. அப்படி நடந்தால் அது கிரிக்கெட்டே இல்லை. அடிக்கடி விக்கெட் கிடைத்துக் கொண்டே இருக்காது என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் களத்தில் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -