“இந்தியாவுக்காக 15 வருசம் விளையாடக் கூடிய வீரரை பார்த்தேன்.. என்னா மெச்சூரிட்டி!” – இர்பான் பதான் வியப்பு!

0
869
Irfan

நாளை ஐபிஎல் தொடரில் மினி ஏலம் நடக்க இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த ஏலத்தில் வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் மற்றும் உள்நாட்டு நட்சத்திர வீரர்கள் எவ்வளவு வேலைக்கு போவார்கள்? எந்த அணிகள் யார் மேல் ஆர்வம் காட்டும்? என்பது குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் இந்த ஏலத்தை சுவாரசியமாக்கக்கூடிய ஒரு விஷயமாக இந்திய இளம் வீரர்கள் சிலர் இருக்கிறார்கள். அதில் 19 வயதான மகாராஷ்டிரா அணிக்காக விளையாடும் அர்சன் குல்கர்னி ஒருவர். இவரை அடுத்த ஹர்திக் பாண்டியாவாக பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் 20 வயதான ஒருவரை அடுத்த சுரேஷ் ரெய்னா என்று அபினவ் முகுந்த் பார்க்கும் அளவுக்கு ஒரு இந்திய இளம் வீரர் ஏலத்தில் இருக்கிறார் என்பது சுவாரசியத்தை அதிகரிக்கிறது.

அந்த இளம் வீரர் 20 வயதான உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடக்கூடிய வலதுகை பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி. மேலும் இவர் ஆப் ஸ்பின் பகுதி நேரமாக வீசக்கூடியவர்.

நடந்து முடிந்த உத்தர பிரதேச டி20 லீக்கில், ஒரு போட்டியில் வெறும் 52 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்களுடன் 122 ரன்கள் குவித்து மிரட்டினார். இங்கிருந்து இவர் வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தார். தற்பொழுது நாளை நடக்க இருக்கும் மினி ஏலத்தில் இவருக்கு நிறைய போட்டி இருக்கும் என்று இந்திய முன்னால் வீரர்கள் கருதுகிறார்கள்.

- Advertisement -

அபினவ் முகுந்த் கூறும் பொழுது “ஐபிஎல் ஸ்கவுட்டை சேர்ந்த ஒருவர், அந்த இளம் வீரர் உண்மையில் ஒரு வலதுகை சுரேஷ் ரெய்னா என்று என்னிடம் கூறினார். அவர் ஸ்பின்னில் அடிக்கக்கூடிய பகுதிகள் எல்லாம் சுரேஷ் ரெய்னா அடிக்கக்கூடிய பகுதிகள் போலவே இருக்கிறது. எனவே ஏலத்தில் அவரை பல அணிகள் பின் தொடர்ந்து செல்லக் கூடும்!” என்று கூறியிருக்கிறார்!

இவர் குறித்து சுரேஷ் ரெய்னாவே கூறும் பொழுது “சமீர் ரிஸ்வி பேட்டிங்கில் வித்தியாசமான இன்டென்ட்டை கொண்டு இருக்கிறார். மேலும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அவர், ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடினால் நிறைய நம்பிக்கையை பெறுவார். அவர் ஆயுஸ் பதோனி போன்ற ஒரு வீரர். ஆனால் அவர் நேராக விளையாட கூடியவர்!” என்று கூறியிருக்கிறார்!