அரசியல் சூழ்ச்சி என் பயிற்சியாளர் பதவியை பறித்தது – ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத் தலைவருடன் நடந்த வாக்குவாதம் குறித்து ஜஸ்ட்டின் லேங்கர் வெளிப்படைப் பேச்சு

0
98
Justin Langer Australia

கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்து என்றால் அதன் ஆதிக்கத்தின் வடிவமாய் இன்றளவிலும் இருப்பது ஆஸ்திரேலியாதான். அவர்களுக்கு என்று தனி கிரிக்கெட் கலாச்சாரமும் மரபும் இருக்கிறது. ஆக்ரோசமான கிரிக்கெட் விளையாடுவதுதான் அவர்களின் கலாச்சாரம். தூஷ்ரா பந்துவீச்சு ஐ.சி.சி-யால் ஏற்றுக்கொள்ளப் பட்டாலும் கூட, கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளாது, தன் பந்து வீச்சாளர்களை தூஷ்ரா வீச அனுமதிக்காது. அப்படியான தனக்கென ஒரு கெளரவத்தை உண்டாக்கி வைத்து, அதில் பிடிவாதமாய் தொடர்வதுதான் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மரபு!

இப்படி எல்லாம் இருந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் பெயர் 2018 மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்கா உடன் நடந்த மூன்றாவது டெஸ்டில் சுக்குநூறாய் உடைந்தது. பந்தை திட்டமிட்டு சேதாரப்படுத்தியதாய் கையும் காலுமாய் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் சிக்குகிறார்கள். விவகாரம் பூதாகரமடைய ஆரம்பிக்க, மூவருக்கும் ஓராண்டு தடைவிதித்து, பயிற்சியாளர் மெக் லெக்மனனையும் பதவியிலிருந்து விலக கேட்டுக்கொண்டது. அவரும் தன் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்கள்.

- Advertisement -

அடுத்து அதே 2018 மே மாதம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா புதிய பயிற்சியாளராக, ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிக்கரமான துவக்க ஆட்டக்காரராக விளங்கிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கொண்டு வருகிறது. மிகப்பெரிய இக்கட்டனான நேரத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட ஜஸ்டின் லாங்கர் அணிக்கு புதிய முகத்தை வடிவமைத்தார். வழக்கமான ஆஸ்திரேலிய ஆக்ரோச கிரிக்கெட் பாணி மாறி நட்புறவான முறையில் வீரர்களின் பேச்சும் செயல்பாடும் மாறுகிறது. பல மோசமான தோல்விகளை ஆஸ்திரேலிய அணி அடைந்தாலும், ஜஸ்டின் லாங்கர் மெல்ல மெல்ல அணிக்குள் புதிய நம்பிக்கையை, வெளிச்சத்தைப் பாய்ச்சினார். படிப்படியாக நம்பிக்கையும் ஊக்கமும் பெற்ற ஆஸ்திரேலிய அணி மீண்டும் சிறப்பான கிரிக்கெட்டிற்கு திரும்பியது. இவர் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு யு.ஏ.இ-யில் நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பையை வென்றது.

ஆனால் இதையெல்லாம் தாண்டி கடந்த பிப்ரவரி மாதம் ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்வலைகளையும் யூகங்களையும் கிளப்பியது. அப்போது ரிக்கி பாண்டிங், மிட்ச்செல் ஜான்சன், ஷேன் வார்ன் போன்றவர்கள் ஜஸ்டின் லாங்கருக்கு ஆதரவாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்தையும், தற்போதைய ஆஸி டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்சையும் கடுமையாக விமர்சித்தார்கள்.

தற்போது சில நாட்களுக்கு முன், அப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் இடைக்கால தலைவராக இருந்த ப்ராயின்ஸ்டையினுடன் நடந்த சூடான விவாதத்தைப் பற்றி ஜஸ்டின் லாங்கர் நினைவு கூர்ந்தார். அதில் “அப்போது பிராய்ன்ஸ்டைன் என்னிடம், உங்களுக்காக உங்கள் வீரர்கள் ஊடகங்களில் ஆதரவாக பேசுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குமே என்று கேட்டார். நான் அதற்கு, ஆமாம் இடைக்கால தலைவரே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. அவர்கள் மிகச்சிறந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள். அவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் இழைகள்.

- Advertisement -

அவர்கள் உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்பாக வேலை செய்பவர்கள். அவர்கள் என்னைக் கவனித்துக்கொள்வது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. அதேபோல் எனது 12 வருட பயிற்சியாளர் அனுபவத்தில் கடைசி ஆறு மாதங்கள் மகிழ்ச்சியான காலமாக இருந்தது என்று உள்குத்தலாகக் குறிப்பிட்டேன்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். பெரிய வெற்றிகளைப் பெற்றோம். பயிற்சியாளர் பொறுப்பில் எனக்குக் கவனமும், ஆற்றலும் இருந்தது. நான் மிக மகிழ்ச்சியாகவும் இருந்தேன். ஆனால் அந்த புல்ஷிட் அரசியலைத் தவிர” என்று சாடி முடித்தார்!