இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் பாக்க வந்தாலே எப்போதும் இதான் நடக்குது; என்ன விட்ருங்க, இந்த வருஷம் நான் வரல! – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேட்டி!

0
110

டி20 உலககோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்ப்பதற்கு நான் செல்லப் போவதில்லை என்று பேசி இருக்கிறார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் ரமிஷ் ராஜா.

டி20 உலக கோப்பை தொடரில் நடைபெறவிருக்கும் குவாலிஃபயர் சுற்று முடிவுற்றவுடன் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை முதன்மை போட்டிகள் நடைபெறுகிறது. இந்த வருடம் 10 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலா ஐந்து அணிகள் இடம்பெறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாபிரிக்கா அணிகள் குரூப் 2ல் இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பரம எதிரி அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி மேல்பர்ன் நகரின் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலககோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பே இந்திய அணியினர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர்.

பொதுவாக மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் மோதிக் கொள்வதை விட அதிகமாக இரு அணிகளின் ரசிகர்கள் மைதானத்தில் கைகலப்பு வரை செல்வர். சில நேரங்களில் வன்முறை அதிகமாகவும் இருக்கும். இதனை குறிப்பிட்டு இந்த வருடம் டி20 உலக கோப்பையில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் போதும் போட்டியில் நான் பங்கேற்க போவதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் ரமேஷ் ராஜா பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

“என்னுடைய கோபத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியாது. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நான் சென்று பார்ப்பதில்லை. மேலும் உணர்வுபூர்வமாக நான் இருப்பதால் சில நேரங்களில் போட்டி முடிந்த பிறகு ரசிகர்களுக்கும் எனக்கும் சண்டை வந்துவிடுகிறது. பலரும் என்னிடம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை சென்று பார்க்கவில்லையா? என்று கேள்விகளை எழுப்பினர். ஆனால் அதை நான் கண்டுகொள்ளவில்லை. எனது வீட்டில் அமர்ந்தபடியே நான் இந்த போட்டியை கண்டு களித்துக் கொள்கிறேன். மைதானத்திற்கு சென்றால் ரசிகர்களிடம் வீணாக சண்டை போடுவதற்கு பதிலாக இதுவே எனக்கு நிம்மதியாக இருக்கிறது.” என்று ரமிஷ் ராஜா தெரிவித்தார்

- Advertisement -