என் வேலை எனக்கு தெரியும்; அவர் வேலை அவருக்கு தெரியும்- சுனில் நரேன் பற்றி ஆண்ட்ரே ரசல் பேச்சு!

0
94
Russel

இந்தியக் கிரிக்கெட் வாரியம் நடத்தும் உலகப் பிரபல்யம் ஐபிஎல் டி20 தொடரில் வெற்றிகரமான அணிகள் என்றால் செயல்பாட்டின் அடிப்படையில் சென்னை மற்றும் மும்பை இரண்டும் ஒருமித்த அளவிற்கு இருக்கும் அணிகள் ஆகும்!

செயல்பாட்டைத் தவிர்த்து புகழ் அடிப்படையில் எடுத்துக் கொண்டால் சென்னை மற்றும் மும்பை அணிக்கு அடுத்து, ஒருமுறை கூட கோப்பையை வெல்லாவிட்டாலும் நட்சத்திர வீரர்கள் விளையாடியதன் மூலம் மூன்றாவது இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது!

- Advertisement -

இதற்கு அடுத்து நான்காவது இடத்தில் மிகப் பெரிய அணியாக செயல்பாட்டுத் திறன் மற்றும் புகழ் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருக்கிறது. கௌதம் கம்பீர் தலைமையில் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது.

இந்த அணிக்கு நீண்டகாலமாக விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்களாக கரீபியன் வீரர்களான சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் இருவரும் இருக்கிறார்கள். சுனில் நரைன் 2012 ஆம் ஆண்டு முதலும், ரசல் 2015 ஆம் ஆண்டு முதலும் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார்கள்.

இந்த இருவருமே மோஸ்ட் வேலிபில் பிளேயர் என்ற பட்டத்தை இரு முறை கொல்கத்தா அணிக்காக வாங்கியவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து இரண்டு முறை வாங்கியவர் ஷேன் வாட்சன் மட்டுமே. இதிலிருந்தே இவர்கள் கொல்கத்தா அணிக்காக எவ்வளவு சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தற்பொழுது ஆண்ட்ரே ரசல் தனது சக கரீபியன் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான சுனில் நரைன் பற்றி சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்பொழுது
” நாங்கள் செய்வோம். ஆனால் நாங்கள் செயல்பாடு குறித்து அதிகம் ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு கொண்டு செல்வது என்னுடைய பங்காகும். நான்கு ஓவர்கள் பந்து வீசுவதும், இறுக்கமாக பந்து வீசுவதும், விக்கட்டுகளை பெறுவதும் அவருடைய வேலையாகும். இது அவருக்கு தெரியும். மேலும் ஆட்டத்தில் ஹாட் ஸ்பாட் கேட்ச்ளை எடுப்பது, மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை தவறவிடாமல் பார்த்துக் கொள்வது எனது வேலையாகும். நாள் முடிவில் நாங்கள் விஷயங்களைப் பற்றி விவாதிப்போம் ஆனால் அது குறித்து பெரிதாக ஸ்ட்ரஸ் எடுத்துக் கொள்ள மாட்டோம். அவருக்கு அவருடைய பங்கு தெரியும் எனக்கு என்னுடைய பங்கு தெரியும்!” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” உண்மையைச் சொல்வதென்றால் ஐபிஎல் தொடரில் மைதானங்கள் சிறியதாக தெரியலாம். ஆனால் நீங்கள் பேட்டை கொண்டு வந்தை நன்றாக அடித்து தான் ஆக வேண்டும். நான் விளையாடும் ஒவ்வொரு மைதானத்திற்கும் நான் மதிப்பு கொடுக்கிறேன். பந்தை ஸ்டாண்டில் அடிப்பது வேடிக்கையாக இருக்கிறது. நாங்கள் வேடிக்கையாக விளையாடுகிறோம். சொந்த மைதானத்தில் விளையாடினாலும் வெளி மைதானத்தில் விளையாடினாலும் இந்தியாவில் உள்ள சூழ்நிலை மிகவும் அற்புதமானது. இது போற்றப்பட வேண்டிய ஒன்று. இது நம்ப முடியாதது. களத்தில் இறங்கியவுடன் நான் என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன்!” என்று கூறி முடித்துள்ளார்!