“விராட் கோலிக்காக ஆட்டநாயகன் விருதை விட்டுக் கொடுத்தேன்.. ஏன் தெரியுமா?” – கம்பீர் விளக்கம்!

0
377
Gambhir

தற்போது இந்திய கிரிக்கெட்டில் எதிரும் புதிருமான இரண்டு வீரர்கள் யார் என்று கேட்டால் அதில் ஒரு வீரர் கம்பீர் என்று யாரும் யோசிக்காமல் சொல்வார்கள். ஏனென்றால் அவருக்கு நிறைய வீரர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டு.

இதில் மிக முக்கியமாக கம்பீருக்கு விராட் கோலி உடன் நிறைய வாய் தகராறுகள் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் உருவாகி, அது அப்படியே தொடர்ந்து இந்த வருட ஐபிஎல் வரை தொடர்ந்தது.

- Advertisement -

குறிப்பாக இந்த வருடம் இருவருக்கும் இடையே களத்தின் மத்தியில் ஏற்பட்ட வாய் தகராறு ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களில் எப்பொழுதும் நீடிக்கக்கூடிய சம்பவமாகஇருக்கும் அளவுக்கு நிகழ்ந்தது.

ஆனால் இதே கம்பீர் 2009 ஆம் ஆண்டு விராட் கோலி முதல் சதம் அடித்த பொழுது தான் பெற்ற ஆட்டநாயகன் விருதை அவருக்கு விட்டுக் கொடுத்தார். இப்படி ஆரம்பித்த இவர்களது உறவுதான் ஐபிஎல் களத்தில் விரும்பத்தகாத வகையில் மாறி நிற்கிறது.

கம்பீரை பொருத்தவரை அவரது மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடிய வீரராக ஆரம்பத்தில் இருந்து இருந்திருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய பொழுது சாகித் அப்ரீடியிடம் அவருக்கு நிறைய முறை மோதல்கள் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் தான் ஏன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருதை விட்டுக் கொடுத்தேன் என்று அவர் கூறும் பொழுது “சத்தியமாக சொல்ல வேண்டும் என்றால் நான் செய்யமுடியாத, ஒரு பெரிய விஷயத்தை செய்துவிடவில்லை. மக்கள் இது குறித்து அதிகம் பேச தேவையே கிடையாது. நான் அதை விராட் கோலிக்கு கொடுத்ததற்கான காரணம், நான் இளம் வீரராக வந்த பொழுது மூத்த வீரர்களிடம் என்ன எதிர்பார்த்தேனோ அதைத்தான் செய்தேன்.முதல் சதம் எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தது.

நாங்கள் குறிப்பிட்ட அந்த போட்டியில் 300 ரன்களை துரத்தினோம். சச்சின் மற்றும் சேவாக் வெளியேறிய பிறகு 20 ரன்கள் இரண்டு விக்கெட் என நாங்கள் இருந்தோம். அந்த போட்டியில் விராட் கோலி ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய முதல் சதத்தை மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாற்ற விரும்பினேன் அவ்வளவுதான்” என்று கூறி இருக்கிறார்.