பைனல்ல எங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் மட்டும் வேணாம்ங்க… ஏன் சொல்றேன்னு நண்பர் பொல்லார்ட்-க்கு தெரியும் – டிவைன் பிராவோ பேட்டி!

0
2407

‘இறுதிப்போட்டியில் எங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் வேண்டாம்’ என்று கலகலப்பாக சிரித்தபடி பேட்டி அளித்துள்ளார் டிவேன் பிராவோ.

முதல் குவாலிபயர் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

- Advertisement -

அடுத்ததாக நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இரண்டாம் குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

வருகிற வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா மூன்று முறை மோதியுள்ளன. அனைத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் யார் பைனலுக்கு வருவார்? எந்த அணி கோப்பையை வெல்லும்? என்பது குறித்த பல்வேறு கணிப்புகள் நிலவி வருகின்றன. அந்த வகையில், பைனலுக்கு யார் வருவார்கள்? என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பவுலிங் பயிற்சியாளருமான டிவைன் பிராவோ இடம் கேள்வி கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு கலகலப்பாக சிரித்தபடியே பதில் கூறிய அவர், “மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் வேண்டாம். எங்களுக்கு சற்று பயமாக இருக்கிறது. உண்மையில் சொல்கிறேன். பிளே-ஆப் வந்த மற்ற மூன்று அணிகளும் அபாயகரமான அணிதான். லக்னோ வெளியேறிவிட்டது. குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எப்படிப்பட்ட அணிகள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. தரமான அணிகள்.

உண்மையிலேயே பைனலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வேண்டாம். ஜோக்ஸ் தள்ளிவைத்துவிட்டு பேசுகிறேன். என்னுடைய நண்பர் பொல்லார்ட் இருக்கிறார். நான் ஏன் சொல்கிறேன் என்று அவருக்கு நன்றாக தெரியும். மற்றபடி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களுடைய ஆட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.” என்றார் பிராவோ.