கபில் தேவ்வுடன் ஹர்திக் பாண்டியாவை ஒப்பிட்டு பேசியதைக் கண்டித்த பாண்டியா – ரசிகர்களுக்கு விளக்கம்

0
69
Kapil Dev and Hardik Pandya

இந்திய கிரிக்கெட்டில் ரன் குவிப்பில் சச்சின் டெண்டுல்கருக்கு மாற்றாக விராட் கோலி கிடைத்திருக்கிறார். ஆனால் ஹரியானா சிங்கம் என்று அழைக்கப்படும் ஸ்விங் பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கபில்தேவிற்கு மாற்றான ஒரு வீரர் இதுவரையில் கிடைக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

ரிதிந்தர் சோதியில் இருந்து இர்பான் பதான். ஹர்திக் பாண்ட்யா, தற்போது வெங்கடேஷ் வரை முயற்சித்துப் பார்த்துவிட்டார்கள் ஆனால் ஒருவரும் அவரளவுக்கு பேட்டிங் பீல்டிங் பவுலிங் என மூன்று துறைகளிலும் சிறப்பானவர்களாக நம்பிக்கையானவர்களாக உருவாகவில்லை.

- Advertisement -

கபில்தேவ் எந்தளவிற்கு ஒரு சிறந்த ஆல்ரவுண்டரோ அந்தளவிற்குச் சிறந்த கேப்டனாகவும் இருந்து, பெரியளவில் வசதிகளும், வருமானமும், புகழும் கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் இல்லாத காலத்திலேயே, 1983ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குச் சென்று உலகக்கோப்பையைத் அசுரபல வெஸ்ட் இன்டீஸ் அணியிடம் இருந்து தட்டிப் பறித்து வந்தவர்!

ஒரு பாஸ்ட் பவுலர் ஒரு சிக்ஸர் அடித்தாலே, “இவர் அடுத்த கபில்தேவாக வருவரா?” என்று பேச்சு கிளம்பும் இந்திய கிரிக்கெட் சமுதாயத்தில், இர்பான் பதான் ஒரு சிறு நம்பிக்கையைக் கொடுத்து அத்தோடு நின்று போனார். அதற்குப் பிறகு ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக வந்து முதுகுவலி பிரச்சினையால் ஆபரேசன் செய்து, தன் வழக்கமான செயல்திறனை இழந்திருந்தார். பின்பு சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு கேப்டனாக மட்டும் இல்லாமல், ஒரு பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராகவும் சிறப்பாகச் செயல்பட்டு கோப்பையை வென்றார். தற்போது மீண்டும் ஹர்திக் பாண்ட்யாவை கபில்தேவோடு ஒப்பிடுவது ஆரம்பித்துவிட்டது!

இதுகுறித்து ஹர்திக்பாண்ட்யா கூறும்பொழுது “கபில்தேவ் உடன் என்னை ஒப்பிடுவதை நான் மரியாதையோடு மறுக்கிறேன். நான் சாதாரணமா ஒரு ஹர்திக் பாண்ட்யா. அவரின் பக்கத்தில் சென்றுவிட்டதாக நான் நினைக்கவில்லை. அவர் விளையாடிய காலம், சூழல், சாதனைகளை எண்ணிப்பார்க்கிறேன். என் கேரியரின் முடிவில் நான் அவரை தொட்டுவிட முடியுமென்று நினைக்கவில்லை. அவர் இந்திய கிரிக்கெட்டில் பவுலிங் பேட்டிங் பீல்டிங்கில் உண்டாக்கி இருந்த தாக்கம் மிகப்பெரியது. அவர் செய்ததில் நான் 5% கூட செய்யவில்லை. ஒப்பிடுவது மக்களின் கிரிக்கெட் பண்டிதர்களின் வேலை. ஆனால் நான் இதை மரியாதையோடு மறுக்கிறேன்” என்று மிகவும் பணிவாகக் தெரிவித்துள்ளார்!

- Advertisement -