வக்கார் யூனிஸ் கிடையாது ; இந்த 3 நடப்பு இந்திய வேகப் பந்துவீச்சாளர்களை தான் நான் பின்பற்றுகிறேன் – உம்ரான் மாலிக்

0
199

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த ஆண்டு அவர் வீசிய வேகத்தை விட இந்த ஆண்டு அதி வேகமாக வீசி வருகிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். அவரை பலரும் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ் உடன் இணைத்து பேசுவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூட இவர் எனக்கு வக்கார் யூனிஸ்சை ஞாபகப்படுத்துகிறார் என்றுகூட கூறியிருந்தார்.

- Advertisement -

உண்மையில் நான் வக்கார் யூனிஸ்சை பின்பற்றவில்லை

சமீபத்தில் பேசியுள்ள உம்ரான் மாலிக் நான் உண்மையில் வக்கார் யூனிஸ்சை பின்பற்ற வில்லை. நான் பின்பற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேர்தான். புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரையே நான் பின்பற்றி வருகிறேன்.

மேலும் பேசிய அவர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நமக்கு நடக்க வேண்டிய ஒரு விஷயம் இருந்தால் அது நிச்சயமாக கடவுளின் அருளால் நடக்கும். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணியை வெற்றிபெற வைப்பதே என்னுடைய நோக்கம். எனது பங்களிப்பின் மூலமாக இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் உம்ரான் மாலிக் கூறியுள்ளார்.

- Advertisement -

நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நன்றி

இந்தியாவிலிருந்து நிறைய ரசிகர்கள் என் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றனர் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தினமும் எனது வீட்டிற்கு என்னுடைய உறவினர்கள் நண்பர்கள் வந்து என்னை சந்தித்து பாராட்டி வந்த வண்ணம் இருக்கின்றனர். ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் நான் சற்று பிசியாகி விட்டேன் என்று புன்னகைத்தபடி கூறியுள்ளார். ஆனால் ஒவ்வொரு நாளும் என்னுடைய ஆட்டத்தை மெருகேற்றும் வகையில் பயிற்சி எடுத்துக் கொண்டே வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.