தோனிக்கு கிடையாது.. பைனல் வெற்றியை நான் இன்னோரு சிஎஸ்கே வீரருக்கு டெடிக்கேட் பண்றேன் – ருத்துராஜ் கெய்க்வாட் பேட்டி!

0
2055

‘கடந்த சீசனில் மோசமாக இருந்துவிட்டு, இந்த சீசனில் ஸ்டைலாக கம்பேக் கொடுத்திருக்கிறோம். மேலும் இந்த பைனல் வெற்றியை நான் இன்னொரு சிஎஸ்கே வீரருக்கு சமர்ப்பிக்கிறேன்.’ என்றார் ருத்துராஜ் கெய்க்வாட்!.

பல்வேறு குழப்பங்களுடன் நடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் பைனலில், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 215 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை சேஸ் செய்ய வந்தனர் சிஎஸ்கே துவக்க வீரர்கள்.

- Advertisement -

முதல் ஓவர் முடிவதற்குள் மழை பெய்ததால் போட்டி தடைப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பின்னர் 15 ஓவராக போட்டி குறைக்கப்பட்டு மீண்டும் சிஎஸ்கே அணியினர் களமிறங்கினர். இம்முறை சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

துவக்க வீரர்கள் அபாரமாக ஆடிக்கொடுத்து வெளியேறினர். பின்னர் வந்த ரகானே மற்றும் தூபே இருவரும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி கொடுக்க, கடைசி ஓவரில் ஜடேஜா சிக்ஸ் மற்றும் பௌண்டரி அடித்து அபாரமாக பினிஷ் செய்து கொடுத்தார். இதனால் சிஎஸ்கே அணியின் கோப்பை கனவு நனவாகியது ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றது.

இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு சிறந்த துவக்கங்கள் கொடுத்த ருத்துராஜ் கெய்க்வாட், 16 போட்டிகளில் 15 இன்னிங்ஸ் விளையாடி 4 அரைசதங்கள் உட்பட 590 ரன்கள் அடித்துள்ளார். நல்ல பங்களிப்பை கொடுத்து, கடைசியில் வெற்றியில் முடித்து கோப்பையை வென்றது குறித்து பேசினார் ருத்துராஜ் கெய்க்வாட்.

- Advertisement -

“இந்த வெற்றி எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. கடந்த சீசன் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. மோசமாக இருந்ததென்று கூறலாம். அதிலிருந்து ஸ்டைலாக கம்பேக் கொடுத்து இந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் செமி-பைனலில் வெற்றிபெற்று, தற்போது வெளி மைதானத்திலும் பைனலில் வெற்றிபெற்று கோப்பையை வென்றிருக்கிறோம்.

இந்த சீசனில் ஒருவரை மட்டும் குறிப்பிடமுடியாது. அனைவரும் சேர்ந்து பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். ரஹானே, தூபே, கான்வே, ராயுடு, மொயின் பாய் என அனைவரும் இணைந்து செயல்பட்டு பெற்ற வெற்றி இது. ராயுடுவை பிரிவது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. அவரைப் போன்ற சீனியர் வீரர்கள் கிடைப்பது அரிது. இந்த வெற்றியை ராயுடுவிற்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

இன்றைய போட்டியில் களமிறங்குகையில் ஒவ்வொரு ஓவரிலும் 12-13 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம். அதை எடுத்துச் செல்ல முடியும் என்கிற முனைப்புடன், குறிக்கோளுடன் களம் இறங்கினோம். சிறந்த துவக்கம் கிடைத்தது. அதை அடுத்து வந்த வீரர்கள் எடுத்துச் சென்ற விதமும் வெற்றி பெற்ற விதமும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.” என்றார்.