“விராட் பையாகிட்ட ஒரு விஷயம் பேசி முடிவு பண்ணிட்டுதான்.. அடிக்க ஆரம்பிச்சேன்” – ஜெய்ஸ்வால் பேட்டி

0
425
Jaiswal

ஆப்கானிஸ்தான அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் உடல் நலம் இல்லாததால் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் விளையாட முடியாமல் போனது. அவருடைய இடத்தில் விளையாடிய கில் ரோகித் சர்மாவை ரன் அவுட் செய்து வைத்தார்.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் உடல்நலம் தேறிய ஜெய்ஷ்வால் அதிரடியாக இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார். தான் விளையாட வேண்டியது எவ்வளவு அவசியமானது என்று நேற்று ஜெயஸ்வால் நிரூபித்தார்.

- Advertisement -

173 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு முதலில் விராட் கோலியுடன் இணைந்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதில் விராட் கோலியின் பங்கு 29 ரன்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து சிவம் துபே உடன் இணைந்து 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஒட்டுமொத்தமாக அவர் 34 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடைய அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றியை மிக எளிதாக மாற்றியது.

நேற்று அவர் விராட் கோலி உடன் இணைந்து பேட்டிங் செய்தது குறித்து, போட்டியின் முடிவுக்கு பின்னால் சில முக்கியமான விஷயங்களை பேசி இருந்தார். விராட் கோலியிடம் இருந்து தாம் அதிகம் கற்றுக் கொள்வதாகவும் கூறி இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் சென்று விளையாட்டு ரசித்து விளையாட முடித்ததில் மகிழ்ச்சி. குறிப்பாக நான் விராட் பையாவுடன் பேட்டிங் செய்வது. ஏனென்றால் அவருடன் இணைந்து விளையாடுவது ஒரு மரியாதை. இதனால் என்னால் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

நாங்கள் இருவரும் விளையாடும் பொழுது எந்த திசையில் அடிக்கலாம் என்று ஒரு சிறிய உரையாடல் நடத்தினோம். பின்னர் நாங்கள் லாங் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசைகளில் அடிக்கலாம் என்று முடிவு செய்தோம். எங்களுடைய இன்டெண்ட் பாசிடிவ் ஆனது. எனவே நாங்கள் பந்தை அடித்து விளையாடவே முயற்சி செய்தோம்.

களத்தில் என்னை வெளிப்படுத்தி என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வதில் நான் கவனம் செலுத்துகிறேன். குறிப்பாக நான் பயிற்சி செய்கையில் கடினமாக உழைக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.