“தாங்கவே முடியலதான்.. ஆனாலும் நான்..!” – முகமது சமி நெகிழ்ச்சியான பேச்சு!

0
7658
Shami

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, ஒட்டுமொத்த இந்தியாவை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ஒருபுறம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தோல்வியை ஏற்க முடியாமல் தற்பொழுது வரை இருந்து வருகிறார்கள். இந்திய அணி இந்தத் தொடர் முழுக்க கொடுத்த நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு மிக அதிகமாக இருந்தது. எனவே எளிதாக வெற்றி பெறும் இந்திய அணி என்று எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய அணியின் வீரர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இந்திய வீரர்கள் இந்த முறை உலக கோப்பையை நிச்சயம் கைப்பற்றுவோம் என்கின்ற நம்பிக்கையில் இருந்தார்கள்.

மேலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு எந்த விதத்திலும் அழுத்தமே இல்லாமல் போட்டியை ஆரம்பித்தது. ஆனாலும் கூட ஆடுகளமும், பனிப்பொழிவும் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக முடக்கிவிட்டது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கடினமான நேரத்திலேயே செய்ய வேண்டியதாக அமைந்தது.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டில் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்த வீரராக முகமது சமி இருந்தார். இறுதிப் போட்டிக்கு முன்பாக ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்ற அவர் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று ஒரு விக்கெட் கைப்பற்றி மொத்தம் 24 விக்கெட்டை எடுத்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரராக அவர் திகழ்ந்தார். அவருடைய அருமையான பந்துவீச்சு பார்ம் காரணமாக இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். தற்பொழுது முகமது சமி மிகவும் மனமடைந்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” நீங்கள் சிலவற்றை வெல்கிறீர்கள் சிலவற்றை இழக்கிறீர்கள். எங்களுக்கு இது விளங்குவதற்கு மிகவும் கடினமான ஒரு மாத்திரையாக அமைந்துவிட்டது. ஆனால் நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம். இந்த அணியைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து அன்பையும் ஆதரவையும் கொடுங்கள்!” என்று கூறியிருக்கிறார்!