“இங்க இருக்க விக்கெட்டுகளை என்னால ரீட் பண்ணவே முடியல!” – வெற்றிக்குப் பின் பேட் கம்மின்ஸ் ஓபன் ஸ்டேட்மென்ட்!

0
1103
Cummins

ஐந்து முறை ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்திருந்தது.

இந்த நிலையில் இன்று இலங்கை அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் லக்னோ மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தியது. போட்டியை ஆரம்பத்தில் சரியாக துவங்காவிட்டாலும் கூட, இறுதியில் மிகச் சிறப்பாக விளையாடி, இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பந்து வீசிய ஆஸ்திரேலியா அணி இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் தந்தது. அந்த அணியின் இரண்டு துவக்க ஆட்டக்காரர்களும் அரை சதம் கடந்தார்கள்.

இந்த நிலையில் அதற்குப் பிறகு போட்டிக்குள் திரும்ப வந்த ஆஸ்திரேலியா அணி மேற்கொண்டு 84 ரன்கள் மட்டுமே தந்து இலங்கை அணியின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி, அவர்களை 209 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

மேற்கொண்டு பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு மிசட்சல் மார்ஸ் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் இருவரும் அரை சதம் அடித்தார்கள். இதற்கு அடுத்து மேக்ஸ்வெல் வந்து அதிரடியாக விளையாடி 31 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.

- Advertisement -

முதல் வெற்றிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது “இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து ஃபீல்டில் ஆற்றல் நன்றாக இருந்தது. மீண்டும் நாங்கள் நன்றாக தொடங்கினோம். அனைத்து பந்துவீச்சாளர்களும் வந்து விக்கெட்டை தாக்கி தங்களுடைய வேலையை சிறப்பாக செய்தார்கள்.

இது ஒரு பெரிய முயற்சி. என்னால் இங்கு உள்ள விக்கெட்டுகளை ரீட் செய்ய முடியாது. இந்த ஆடுகளத்தில் 300 ரன்கள் என்பது சமமான ஒன்றாக இருந்திருக்கும். வெளியில் இருக்கும் சத்தங்கள் பெரிதாக ஒன்றும் நம்மை பாதிக்காது என்று நம்புகிறேன். நாங்கள் தற்போது தொடரில் நீடிக்கிறோம். தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம்!” என்று கூறியிருக்கிறார்!