இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்பதில் எனக்கு எந்தவித மறுப்பும் இல்லை – வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பேட்டி

0
979
Mohammad Shami

சமீப சில வருடங்களில் இந்திய அணியில் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்திலும் மிக சிறப்பாக பந்து வீசி வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் மிக முக்கியமாக பார்க்கப்படும் இருவர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக பிசிசிஐ ரோஹித் ஷர்மாவை நியமித்தது நம் அனைவருக்கும் தெரிந்த கதை. தற்பொழுது டெஸ்ட் போட்டிகளுக்கு பிசிசிஐ எந்த வீரரை கேப்டனாக அறிவிக்க போகிறது என்கிற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

பல்வேறு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மாற்றி மாற்றி ஒவ்வொரு வீரர்களை கூறி வர, சமீபத்தில் ஜஸ்பிரித் பும்ராவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கேப்டன் பதவி உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை நீங்கள் ஏற்கிறீர்களா என்பதே அந்த கேள்வி.

அதற்கு பதிலளித்த ஜஸ்பிரித் பும்ரா, “கேப்டன் பதவியை எந்த வீரர்தான் வேண்டாம் என்று கூறுவார். தனக்கு அந்த கேப்டன் பதவி கிடைக்கப் பெற்றால் மிகவும் பெருமையாக உணர்வேன் என்றும், அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி தனது பணியையும் சிறப்பாக செய்வேன் என்றும் கூறியிருந்தார்.

எந்தவித பொறுப்பு கொடுத்தாலும் அதை ஏற்க நான் தயார்

ஜஸ்பிரித் பும்ராவிடம் கேட்கப்பட்ட கேள்வி போல தற்போது முகமது ஷமியிடம், ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு முகமது ஷமி, “என்னிடம் எந்த வித பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நான் ஒரு மனதாக ஏற்றுக் கொள்வேன். இந்திய அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை யார் தான் மறுப்பார்கள். ஆனால் தற்பொழுது கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவது குறித்து எந்தவித யோசனையும் தனக்கு இல்லை”, என்று முகமது ஷமி கூறியுள்ளார்.

- Advertisement -

57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி இதுவரை 209 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 27.13 மற்றும் இவரது பௌவுலிங் எக்கானமி 3.27 என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பேட்டிங்கில் இரண்டு அரை சதங்களுடன் இதுவரை மொத்தமாக 615 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 73.83 ஆகும்.

ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் ஒவ்வொரு வீரரை மாற்றி மாற்றி பெயர் கூறினாலும், மறுப்பக்கம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்களிடம் கேப்டன் பதவி குறித்த கேள்வி எழுப்பினாலும் இறுதியில் பிசிசிஐ எடுக்கும் முடிவே இறுதியானது. எனவே பிசிசிஐ எந்த முடிவை இறுதியில் எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.