இவர் சென்னை அணியில் இல்லாத போதும் எனக்கு அறிவுரை வழங்கி உதவுகிறார் – முகேஷ் சவுத்ரி புகழாரம்

0
243
Mukesh Choudhary CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அவரால் விளையாட முடியாமல் போனது. அவருடைய இடத்தில் தற்போது இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி விளையாடி வருகிறார். 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 11 விக்கெட்டுகளை கைப்பற்றி, நாளுக்கு நாள் அவர் மீதான நம்பிக்கையை அதிகப் படுத்திக் கொண்டு வருகிறார்.

அவர் எனக்கு நிறைய ஐடியாக்களை கொடுத்தார்

கடந்த ஆண்டு நெட் பவுடராக விளையாடி வந்த முக்கிய ஸ்தோத்தரி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அதற்கடுத்து தொடர்ச்சியாக தற்போது சிறப்பாகவே விளையாடி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். முகேஷ் சவுத்ரி தற்பொழுது ஒரு சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை. அப்பொழுது தீபக் சஹர் எனக்கு தொலைபேசியில் ஒரு சில விஷயங்களை கூறினார். அவர் எனக்கு நிறைய ஐடியாக்களை கொடுத்தார்.அவர் என்னிடமிருந்து அழுத்தத்தை அகற்றினார்.

குறிப்பாக சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நான் சிறப்பாக பந்து வீசியதை வெகுவாக பாராட்டினார். அந்த போட்டிக்கு பின்னர் மீண்டும் என்னை தொலைபேசியில் அழைத்து, எப்பொழுதும் போட்டியில் சூழ்நிலையை கணிக்க பழகி கொள்ளுமாறு கூறினார். பின்னர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்து வீச வேண்டும். அதேபோல எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்”. இவ்வாறு தீபக் சஹர் தனக்கு கூடிய விஷயங்களை தற்பொழுது முகேஷ் சவுத்ரி நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.