ஸ்மித், விராட் கோலி இருவரும் எனது ஷாட்டை கிண்டலடித்தார்கள்; அதன் பிறகே நான் திருத்திக்கொண்டேன் – ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பேட்டி!

0
942

“டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாடும் சில ஷார்ட்களை விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சேர்ந்து கிண்டலடித்து, எதற்காக அப்படி விளையாடுகிறாய்? என கேட்டார்கள். அதன் பிறகு திருத்திக்கொண்டேன்.” என்று சமீபத்திய பேட்டியில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, இந்த வருடம் சம்மரில் இங்கிலாந்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழக்காமல் அரைசதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரில், முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் கவாஜா உடன் சேர்ந்து 118 ரன்கள் அடித்து முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்துக்கொடுத்தார். இவர் 66 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

இதுவரை இங்கிலாந்தில் இரண்டு போட்டிகளில் மூன்று இன்னிங்கள் விளையாடி 180 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால் பைனலுக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியபோது பெரிதளவில் செயல்படவில்லை. அடிக்கடி ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி அவுட் ஆகி வந்தார். இந்த வருடம் மட்டும் 17 முறை ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி அதில் நான்கு முறை அவுட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இப்படிப்பட்ட ஷாட்டை நான் விளையாடுவதை ஸ்மித் மற்றும் விராட் கோலி இருவரும் விமர்சித்தார்கள். அதன் பிறகு நான் சற்று திருத்திக்கொண்டேன் என சமீபத்திய பேட்டியில் அலெக்ஸ் கேரி பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

- Advertisement -

“ஓவல் மைதானத்தில் முதல் இன்னிங்சில் நான் வழக்கமாக விளையாடும் சில ஷார்ட்களை கட்டுப்படுத்திக்கொண்டு விளையாடினேன். அடிக்கடி நான் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுவதைக் கண்ட விராட் கோலி மற்றும் ஸ்மித் இருவரும், ‘எதற்காக அந்த ஷாட்டை விளையாடுகிறாய்?.” என்று கேட்டார்கள். அப்படிப்பட்ட வீரர்களே என்னிடம் வந்து அது அனாவசியமான ஷாட் என்று கூறும்பொழுது, நான் சரி செய்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?. என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆகையால் திருத்திக்கொண்டேன்.

இங்கிலாந்தில் விளையாடும்பொழுது பதட்டத்தை சந்தித்து வந்த நான், என்னுடைய பேட்டிங்கில் சில மாற்றங்களை கொண்டுவந்து அணுகுமுறையை சற்று மாற்றியதால் நம்பிக்கையுடன் விளையாட முடிகிறது.” என்று அலெக்ஸ் கேரி பேசினார்.