0 வெற்றி.. இருந்தும் பங்களாதேஷ் பாகிஸ்தான் அணிகளுக்கு பரிசு தொகை.. எவ்வளவு தெரியுமா.?

பாகிஸ்தானில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றுகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. ஏற்கனவே குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற 4 அணிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. இதனால் குரூப் ஏ பிரிவில் இருந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளன.

- Advertisement -

அதேபோல் குரூப் பி பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளில் யார் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கவிருந்த பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு பரிசுத்தொகை?

இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றியை கூட பெறாமல் குரூப் சுற்றில் கடைசி இடத்தில் நிறைவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியை விடவும் வங்கதேசம் அணி கவுரவமாக தோற்றதால், அந்த அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

என்னதான் பாகிஸ்தான் அணி மற்றும் வங்கதேச அணி ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியுடன் வெளியேறி இருந்தாலும், அவர்களுக்கு சிறந்த பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குரூப் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கும் சேர்த்து ரூ.2.31 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

7வது இடம் யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.1.09 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைசி இடத்தில் நிறைவு செய்த பாகிஸ்தான் அணிக்கு ரூ.1.09 கோடியும், 7வது இடத்தில் நிறைவு செய்த வங்கதேசம் அணிக்கு ரூ.1.22 கோடியும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தினால், வங்கதேசம் அணி 7வது இடத்தில் நிறைவு செய்வது உறுதியாகும். ஆனால் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணி வீழ்த்தினால், இங்கிலாந்து அணி 7வது இடத்திற்கும், வங்கதேசம் அணி 6வது இடத்திற்கும் முன்னேறும். அப்படி நடந்தால் வங்கதேசம் அணிக்கு ரூ.3.05 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தமாக 8 அணிகளுக்கும் சேர்த்து ரூ.60.25 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

- Advertisement -
Published by

Recent Posts