“தன்னால என்ன செய்ய முடியும்னு காட்டி இருக்காரு இந்த பையன்.. பவுலர்களுக்கு ஆன்சரே இல்ல!” – ஹர்பஜன் சிங் அதிரடியான பாராட்டு!

0
1285
Harbhajan

இந்திய கிரிக்கெட் மிக வேகமாக மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது. புதிய அணி, புதிய அணுகுமுறை என்று, அடுத்த பத்து வருடங்களுக்கான இந்திய அணி அமைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது!

ரோகித் சர்மா கேப்டன் பொறுப்புக்கு வந்த பொழுது அவருக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் சேர்த்து 3 உலக கோப்பைகள் கொடுக்கப்படுவதாகத்தான் சொல்லப்பட்டது. இந்த வகையில் அவர் தற்போது மூன்றாவது உலகக் கோப்பையில் இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் யூனிட் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் சீனியர் வீரர்களில் விராட் கோலி மட்டுமே இன்னும் மூன்று முதல் நான்கு வருடங்கள் விளையாடக் கூடியவராக இருப்பார். ஷிகர் தவான் முதல் கொண்டு சீனியர் வீரர்களை வெளியே அனுப்பும் வேலைகள் எப்பொழுதோ துவங்கி விட்டது. இதில் அடுத்த வீரராக ரோஹித் சர்மாதான் இருப்பார் என்பது தெரிந்த விஷயம்.

தற்பொழுது இந்த இடங்களை நிரப்புவதற்கான வீரர்களாக மற்றும் எதிர்கால இந்திய அணியின் வீரர்களாக கில், ரிஷப் பண்ட், ருதுராஜ், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இதை நிரூபிக்கும் விதமாக உலகக் கோப்பை திட்டத்தில் இல்லாத ருதுராஜுக்கு, உலகக் கோப்பைக்கு முன்பாக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட காரணத்தால் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டது. அத்தோடு இல்லாமல் அவருக்கு நேற்று விளையாடும் அணியிலும் இடம் கொடுக்கப்பட்டது.இது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் ஒன்றாக இருந்தது.

மேலும் நேற்று வாய்ப்பு பெற்ற ருதுராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எடுத்தார். அவர் கில் உடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினார். இருவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

தற்பொழுது இவர்கள் குறித்து பேசி உள்ள ஹர்பஜன்சிங் “ஒரு வழக்கமான பஞ்சாபி பையன் தன்னுடைய சொந்த குகையில் என்ன செய்ய முடியும்? என்று நேற்று சுப்மன் கில் காட்டினார். அவர் தனது சொந்த மைதானத்தின் சூழல்களை நன்றாக பயன்படுத்தி 74 ரன்கள் எடுத்தார்.

நீண்ட காலத்திற்குப் பின்பு அணிக்கு திரும்பும் பொழுது யாரும் சிறப்பாகச் செயல்பட முடியாது. ஆனால் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டார். கில் உடனான அவரது பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளியது. மேலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பதில்களை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

சூரியகுமார் யாதவ் ஆறாவது இடத்தில் பினிஷராக இருக்க முடியும் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவர் அதைத்தான் செய்தார். அந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்து அரை சதத்தை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -