இந்திய கிரிக்கெட்

மெல்போர்ன் மைதானத்தில் அதிகபட்ச ரன் சேஸ் எவ்வளவு.. 96 வருட சாதனையை இந்தியா உடைக்குமா?.. 4வது டெஸ்ட்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 96 வருட சாதனையில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது ஐந்தாவது நாளுக்குள் நுழைந்து இருக்கிறது. மேலும் தற்போது போட்டி வெற்றி, தோல்வி, டிரா என மூன்று முடிவுகளை எடுப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.

சிறப்பாக வந்து தவறவிட்ட இந்திய அணி

இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் அங்கிருந்து ஆஸ்திரேலியா அணியை 200 ரன்களை தாண்டி விட்டு இருக்கிறது. இதன் காரணமாக தற்பொழுது இந்திய அணிக்கு சேஸ் செய்யப்படும் இலக்கு 300 ரன்களையும் தாண்டி இருக்கிறது.

இன்று நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருக்கிறது. இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணிக்கு 333 ரன்கள் முன்னிலை கிடைத்திருக்கிறது. மேலும் நாளையும் ஆஸ்திரேலியா அணி எத்தனை ஓவர்கள் விளையாட முடிந்தாலும் தொடர்ந்து விளையாடும். கடைசி விக்கெட்டுக்கு டிக்ளர் செய்வது கொஞ்சம் கடினம். அவர்கள் வெல்வது அல்லது டிரா செய்வதை மட்டுமே பார்ப்பார்கள்.

- Advertisement -

மெல்போர்ன் மைதான வரலாறு

இந்த குறிப்பிட்ட மைதானத்தை எடுத்துக் கொண்டால் இந்த மைதானத்தில் அதிகபட்ச டெஸ்ட் கிரிக்கெட் ரன் சேஸ் 1924 ஆம் ஆண்டு 332 ரன்களை துரத்தியது இருக்கிறது. இதற்கு அடுத்து சமகாலத்தில் 2013 ஆம் ஆண்டு 231 ரன்கள் சேஸ் செய்யப்பட்டு இருக்கிறது. மற்றபடி நவீன கிரிக்கெட் காலத்தில் இங்கு 200 ரன்கள் தாண்டி கூட ரன்கள் பெரிய அளவில் சேஸ் செய்யப்படவில்லை.

இதையும் படிங்க : 228-9.. ஆஸி கடைசி விக்கெட் சோதனை.. பும்ரா சிராஜ் உழைப்பு வீண்.. வெற்றிக்கும் வாய்ப்பு.. 4வது டெஸ்ட்

தற்போது ஆஸ்திரேலிய அணி 333 ரன் முன்னிலை பெற்று இருப்பதால், இதுவே மெல்போர்ன் மைதானத்தில் சேஸ் செய்யப்பட்டால் மிக அதிகபட்ச ரன்னாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த மைதானத்தில் இந்த ரன்னை துரத்தி 96 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனையை படைக்குமா? என்று பார்க்க வேண்டும்

- Advertisement -
Published by
Tags: Ind vs Aus

Recent Posts