“இந்தியாவுக்கு பைனல்ல இவர்தான் கேம் சேஞ்சர்.. நீங்க நினைக்கிற ஆள் இல்ல!” – கம்பீர் அதிரடியான பேச்சு!

0
2149
Gambhir

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.

இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களையும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. மேலும் இதுவரையில் இந்த உலகக் கோப்பையில் தோல்வி அடையாத ஒரே அணியாக இந்திய அணி இருந்து வருகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி லீக் சுற்றில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்தது. ஆனால் இறுதியாக அரை இறுதி வரை தொடர்ச்சியாக எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியை எட்டி இருக்கிறது. மேலும் லீக் சுற்றில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்க அணியை அரை இறுதியில் வீழ்த்தி இருக்கிறது.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணியும் சந்திக்க விரும்பாத ஒரு அணியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இந்திய அணியின் செயல்பாடு மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

இந்தியா அணிக்கு பெரிய அளவில் ரன்கள் குவித்தவர்களாக இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி ரோஹித் சர்மா ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் இருக்கிறார்கள். இதில் விராட் கோலி எழுநூறு ரண்களை கடந்து விட்டார். ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் 500 ரன்கள் தாண்டி அடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் கே எல் ராகுல் இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் நல்ல சராசரியில் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரண்களை எடுத்து இருக்கிறார்கள்.

இதில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செயல்பாடு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இருந்து வருகிறது. நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவர் மிடில் ஆர்டரில் வந்து 500 ரன்கள் தாண்டி அடித்திருக்கிறார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் ஒரு மிடில் ஆர்டர் 500 ரன்கள் அடித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி பற்றி பேசிய கம்பீர் கூறும் பொழுது ” இந்த உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர்தான் எனக்கு மிகப்பெரிய கேம் சேஞ்சர். அவர் காயம் அடைந்து அணியில் தன்னுடைய இடத்துக்காக போராட வேண்டி இருந்தது.

ஆனால் முக்கியமான நாக் அவுட் போட்டியில் 70 பந்துகளில் அவர் சதம் அடித்தது மிகப்பெரிய விஷயம். அவர் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு மிக முக்கியமான வீரராக இருப்பார். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்கள் ஆடம் ஜாம்பா மற்றும் மேக்ஸ்வெல் பந்து வீச வரும்பொழுது ஸ்ரேயா மிகவும் முக்கியமாக இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -