இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜிம்பாப்வே அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சியில் ஒரு மெகா குளறுபடி ஏற்பட்டிருந்தது. தற்போது அதற்கான காரணங்கள் தெரிய வந்திருக்கின்றன.
இந்திய அணி கடந்த வாரம் சனிக்கிழமை டி 20 உலகக் கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கைப்பற்றியது. தற்பொழுது ஒரு வாரம் கடந்த பின்னும் இந்திய அணி t20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியதை வீரர்கள் மற்றும் இந்திய மக்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது இந்திய அணி டி20 வடிவத்தில் தற்போது உலக சாம்பியன் ஆக இருக்கும் நிலையில் சுக்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி உலகச் சாம்பியன் ஆன முதல் போட்டியிலேயே, டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே அணியிடம் தோற்று, வெற்றி கொண்டாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் செய்திருக்கிறது.
இந்த நிலையில் மேலும் இந்த போட்டியில் ஒரு சர்ச்சையாக இந்திய வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சியில் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் காணப்பட்டது. பொதுவாக ஒரு கிரிக்கெட் வடிவத்தில் ஒரு அணி எத்தனை உலகக் கோப்பை தொடர்களை வென்று இருக்கிறதோ, அத்தனை நட்சத்திரங்கள் இடம் பெறும்.
இந்திய அணி இரண்டு டி20 உலக கோப்பை தொடர்கள் வென்றிருக்கும் நிலையில் இந்திய அணி வீரர்களின் ஜெர்சியில் இரண்டு நட்சத்திரங்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒரே நட்சத்திரம் மட்டுமே இருப்பது, இந்திய அணி தோல்வி அடைந்த காரணத்தினால், திடீரென சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையான விஷயமாக மாற்றப்பட்டது. தற்பொழுது ஏன் ஒரு நட்சத்திரம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : 3 பந்தில் 14 ரன் தேவை.. வாஷிங்டன் சுந்தர் செய்த செயல்.. குழப்பத்தில் பதில் தேடும் ரசிகர்கள்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் வெல்வதற்கு முன்பாகவே சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விட்டது. இதன் காரணமாக அவர்களுக்கு இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட ஜெர்சியை அனுப்புவது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முடியவில்லை. அதே சமயத்தில் இந்திய அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது இரண்டு நட்சத்திரம் கொண்ட ஜெர்சியை சஞ்சு சாம்சன் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது நேரம் இல்லாததால் நடந்த விஷயம் எனவும், தெரியாமல் செய்யப்பட்ட தவறு கிடையாது எனவும் விளக்கப்பட்டு இருக்கிறது!