2022 ஐ.பி.எல் ஏலத்தில் சாம் கர்ரன், கெயில் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லை – காரணம் இதுதான்

0
1532
Sam Curran and Chris Gayle

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடருக்கு முன்பதாக இந்தியா எளிதில் தொடரை கைப்பற்றும் என்று பலரும் நினைத்தபோது, தற்போது முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி பெற்று தொடரை இந்தியா இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அனுபவமற்ற கேஎல் ராகுலின் கேப்டன்சி கூறப்பட்டது. முக்கியமான நேரத்தில் அவர் எடுக்க தவறிய முடிவுகளால் தான் தோல்வியை இந்தியா சந்தித்தது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஒருபக்கம் இந்த ஒருநாள் தொடர் நடந்து கொண்டிருந்தாலும் இப்போதே ரசிகர்கள் ஐபிஎல் தொடருக்கு தயாராகி விட்டனர். மேலும் இந்த முறை எட்டு அணிகளுக்கு பதில் 10 அணிகள் பங்கேற்கும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து விட்டது. 2 புதிய அணிகள் ஆக லக்னோ மற்றும் அகமதாபாத் இணைக்கப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளது.

- Advertisement -

இந்த ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 312 வீரர்கள் ஒரு முறை கூட தங்களது நாட்டுக்கு விளையாடாத வீரர்கள். மேலும் பூட்டான் ஓமன் போன்ற நாடுகளில் இருந்து கூட வீரர்கள் தங்களது பெயரை இந்த தொடருக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் தெரியும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் முக்கியமான சில வீரர்கள் இந்த தொடருக்கு தங்களது பெயரை பதிவு செய்யவில்லை.

அதில் குறிப்பாக கெயில், ஸ்டோக்ஸ், ரூட், சாம் குர்ரன், ஆர்ச்சர், வோக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துவிட்டனர். இங்கிலாந்து வீரர்களான ஸ்டோக்ஸ், ரூட், சாம் குர்ரன், ஆர்ச்சர், வோக்ஸ் ஆகியோர் அவர்களது டெஸ்ட் அணியின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரை புறக்கணித்துவிட்டு அவர்களது நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் ஆன திட்டமிட்டுள்ளனர். ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் ஆட விருப்பம் தெரிவித்து இருந்தாலும் அவரின் அதிகமான வேலைப்பளுவை கருத்தில்கொண்டு இந்த தொடரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த கெயில் தன்னுடைய வயதை கருத்தில் கொண்டு இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே அணிகள் தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களையும் முடிவு செய்து விட்டதால் அவர்களை சுற்றி மற்ற வீரர்களையும் எடுத்து தங்களது அணியை இந்த முறை கோப்பையை வெல்ல வைக்க பெரிதும் முயற்சி எடுத்து வருகின்றன.

- Advertisement -