2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணியின் தற்போதைய இடம்

0
954
Virat Kohli WTC

முதல் முறையாக ஐசிசி சார்பில் டெஸ்ட் போட்டிகளுக்கான ஒரு தனி உலக சாம்பியன்ஷிப் தொடர் துவங்கப்பட்டது. 2019-2021 ஆண்டு வரையிலான முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகின. இரு அணிகள் மோதிய அந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றியது.

தற்பொழுது 2021-2023 ஆண்டு வரையிலான இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போன்றே, இந்த தொடரிலும் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களை இறுதியில் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்பு போலவே தேர்வாகும்.

- Advertisement -

புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்திய அணி

2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் பெற்றதன் மூலமாக 36 புள்ளிகளை பெற்று ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து இலங்கை அணி 2 வெற்றிகளுடன் 24 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

மூன்று வெற்றிகள் மற்றுமொரு தோல்வி பெற்று 36 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணியை தொடர்ந்து 4 வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் இரண்டு போட்டிகளில் டிரா என 54 புள்ளிகளைப்பெற்று நான்காவது இடத்தில் இந்திய அணி உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றால் இந்திய அணியின் புள்ளிகள் உயரும்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஒரு வெற்றியுடன், 1-0 என்கிற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும். மறுபக்கம் இந்திய அணிக்கு புள்ளிகளும் உயரும். இதன் மூலமாக இந்திய அணி 3வது அல்லது 2வது இடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய மண்ணில் அந்த டெஸ்ட் தொடர் நடைபெறுவதால் நிச்சயமாக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. அந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், முதலிடத்திற்கு இந்திய அணி முன்னேறவும் அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேற வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய விருப்பத்தை தற்பொழுது தெரிவித்து கொண்டு வருகின்றனர்.