முக்கிய வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் தொடங்கப் போகும் ஐபிஎல் தொடர் – முதல் வாரம் களமிறங்க இயலாத வீரர்கள் பட்டியல் வெளியீடு

0
471
IPL Foreigners

ஐபிஎல் தொடர் நடைபெற இன்னும் சில நாட்களே இருக்கிறது. அனைத்து அணிகளும் தற்பொழுது ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்து கொண்டிருக்கின்றன. வீரர்கள் அனைவரும் பயிற்சி ஆட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26ம் தேதியன்று நடைபெற இருக்கின்றது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு சில வெளிநாட்டு வீரர்களின்றி முதல் வாரத்தில் களம் இறங்கப் போகும் அணிகள்

ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என்கிற செய்தி தற்பொழுது நமக்கு கிடைத்துள்ளது. அவர்கள் யார் யார் என்று தற்போது பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ட்வைன் பிரிட்டோரியஸ் முதல் வாரம் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை.

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் கொல்கத்தா அணியில் பங்கேற்கப் போவதில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

தென்ஆப்பிரிக்க அணி வீரர்களான எய்டன் மார்க்ரம், மார்கோ ஜென்சன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் சீன் அப்போட் ஆகியோர் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் ஐதராபாத் அணியில் பங்கேற்கப் போவதில்லை.

டெல்லி கேப்பிடல்ஸ் :

ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் தென்ஆப்பிரிக்க வீரர்கள் லுங்கி இங்கிடி மற்றும் நோர்ஜே மற்றும் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் டெல்லி அணியில் பங்கேற்கப் போவதில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :

ஆஸ்திரேலிய வீரர்கள் ஜேசன் பெஹ்ரென்டாஃப், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் பெங்களூர் அணியில் பங்கேற்கப் போவதில்லை.

பஞ்சாப் கிங்ஸ்

இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தென் ஆப்பிரிக்க வீரர் வீரர் காகிசோ ரபாடா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் பஞ்சாப் அணியில் பங்கேற்கப் போவதில்லை.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்

ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மேற்கிந்திய தீவு வீரர்கள் ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ் தென் ஆப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் மற்றும் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் ஆகியோர் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் லக்னோ அணியில் பங்கேற்கப் போவதில்லை.

குஜராத் லயன்ஸ் :

தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் மற்றும் மேற்கிந்திய தீவு வீரர் அல்சாரி ஜோசப் ஆகியோர் ஐபிஎல் தொடரில் முதல் வாரத்தில் குஜராத் அணியில் பங்கேற்கப் போவதில்லை