இந்திய கிரிக்கெட்

நாங்கள் தோனியை தாண்டி விட்டோம்.. இதை 2 ஆண்டு கிடையாது 6 ஆண்டு திட்டம் – ஸ்டீபன் பிளமிங் பேச்சு

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கான சிஎஸ்கே அணியை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியிருக்கிறார். மேலும் தோனி ஓய்வு பெற்றதும் அணியை எப்படி முன்னெடுத்துச் செல்வது? என்பது குறித்தும் தங்களது திட்டங்களை விளக்கி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற முடியல ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகம் இளம் வீரர்களை மட்டுமே குறி வைத்து வாங்கி, அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை அமைக்கும் முயற்சியில் இருப்பதை வெளிப்படையாக தெரிவித்துவிட்டது. டேவிட் மில்லர் போன்ற சர்வதேச அனுபவம் கொண்ட சீனியர் வீரர்களை கூட வாங்க முயற்சி செய்யவில்லை.

தோனியின் பலமும் சிஎஸ்கே பலவீனமும்

தோனி ஒரு கேப்டனாக அவரது உள்ளுணர்வின் போட்டிக்கு முன்போ அல்லது போட்டியிலோ முடிவுகளை எடுக்கக் கூடியவர். இது அந்தந்த நேரத்தில் சூழ்நிலைகளுக்கு எடுக்கப்படும் முடிவுகளாக இருப்பவை. எனவே தோனியின் சிந்தனையை இன்னொருவருக்கு கடத்துவது கற்றுத் தருவது என்பது முடியாத காரியம்.

எனவே தற்போது புதிய கேப்டனாக வந்திருக்கும் ருதுராஜ் அவருடைய வழியில் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தோனிக்கு செட் ஆகும் வீரர்கள் ருதுராஜிக்கு செட்டாவது கடினம். எனவே மற்ற ஐபிஎல் அணிகள் அதிரடியாக விளையாடுவதற்கு வீரர்களை வைத்திருப்பது போல சிஎஸ்கேவும் தற்பொழுது இந்த பாதையில் திரும்பி இருக்கிறது.

- Advertisement -

ஆறு ஆண்டுகளுக்கான அணி

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்ங் கூறும் பொழுது “நாங்கள் எங்களுடைய தொடக்க பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் வலிமையாக இருக்க வேண்டும் என உணர்ந்தோம். அதேபோல ஒரு கட்டத்தில் தோனியும் ஓய்வு பெறுவார் என்கின்ற விஷயத்தையும் நாங்கள் புரிந்து கொண்டு எதிர்பார்த்து இருந்தோம்”

இதையும் படிங்க : வெங்கடேஷ் ஐயர் மேல தினேஷ் கார்த்திக்குக்கு நம்பிக்கை இல்ல.. நாங்க கேட்டப்ப இது தெரிஞ்சது – அபினவ் முகுந்த் பேச்சு

“சஞ்சு சாம்சன் ஒரு தரமான வீரர். அவருடைய ரோலை அவர் சிறப்பாக செய்கிறார். மேலும் இது தோனியின் இடத்தை நிரப்புவதற்கான ஒரு திட்டமிடல். மேலும் இது அணியையும் புத்துணர்ச்சி ஊட்டக் கூடியது. மேலும் இரண்டு ஆண்டுகள் அல்ல அடுத்த ஆறு ஆண்டுகளில் சிஎஸ்கே எப்படி இருக்கும் என்பதை பற்றியது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by