இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. போட்டியின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது இந்திய அணி 2 வெற்றியுடன் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் தொடரையும் கைப்பற்றி விட்டது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 45 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி உட்பட 52 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் 28 பந்துகளில் 7 ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரி அடித்து 52* ரன்களுடன் இறுதி வரை பண்ட் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆரம்பத்தில் சற்று சொதப்பினாலும் பின்னர் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் போவல் ஆகியோரும் துணைகொண்டு வெற்றிக்காக போராடியது. 41 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 62 ரன்கள் பூரன் குவித்தார். மறுப்பக்கம் போவல் 36 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரி உட்பட 68* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இருப்பினும் மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே குவித்தது. இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
எனது அழுத்தத்தை குறைத்த விராட் கோலி
நேற்று ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினார். 10 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே வைத்து கிஷன் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் ரோஹித் ரன் குவிக்க சற்று தடுமாறினார். பின்னர் வந்த விராட் கோலி ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய அதிரடியை காண்பிக்க தொடங்கினார்.
நேற்று விராட் கோலி ஆடிய விதம் பார்க்க மிக அற்புதமாக இருந்தது. அவர் தாமாக முன் வந்து அற்புதமான துவக்கத்தை கொடுத்ததால் என்னுடைய அழுத்தம் குறைந்தது.இதனால் நான் ரன் குவிக்க சற்று நேரம் எடுத்து கொண்டேன். ஆரம்பத்தில் விராட் கோலி அதிரடியான துவக்கத்தை கொடுக்க இறுதியில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் அற்புதமாக விளையாடி இந்திய அணிக்கு சிறந்த ஸ்கோரை பெற்று தந்தனர் என்று ரோஹித் வெகுவாக பாராட்டினார்.