உலககோப்பையில் இவருக்கு ஓபனிங் இறங்க வாய்ப்பு கொடுங்க, அதிக ரன்களை இவர்தான் அடிப்பார் – உலகக்கோப்பை வின்னிங் கேப்டன் கருத்து!

0
4614

உலக கோப்பை தொடரில் இவரை துவக்க வீரராக களம் இறக்குங்கள் அதிக ரன்களை அடிப்பார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்னும் ஒரு சில தினங்களில் துவங்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய அணி பும்ரா மற்றும் ஜடேஜா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஆனாலும் தற்போது இளம் வீரர்கள் இந்திய அணியை ஆக்கிரமித்து இருப்பதால் கூடுதல் பலத்துடனும் நல்ல எதிர்காலத்துடன் காணப்படுகிறது.

- Advertisement -

முதல் முறையாக டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை வழி நடத்துகிறார் ரோகித் சர்மா. அவருக்கு 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் மூலம் ஆஸ்திரேலியா மைதானம் பரிச்சயமாக உள்ளது. அந்த அனுபவத்தைக் கொண்டு இந்திய அணியை கோப்பையை வெல்லும் அளவிற்கு வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் நடப்பு சாம்பியன் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியா தனது சொந்த மைதானத்தில் விளையாடுகிறது என்பதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இருக்கும் ஒரே சிக்கல் எந்த வீரரை எப்போது களம் இறக்க வேண்டும் என்பதுதான். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆர்டர் இன்னும் அந்த அணிக்கு குழப்பமாகவே இருக்கிறது.

இந்நிலையில் இவரை அணியில் சரியாக பயன்படுத்துங்கள். துவக்க வீரராகவும் களம் இறக்கினால், ஆஸ்திரேலிய அணிக்கு வேகமாக ரன் குவிக்க உதவுவார். டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்கள் பட்டியலிலும் நிச்சயம் இடம் பிடிப்பார் என 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

“என்னை பொருத்தவரை, ஸ்டீவ் ஸ்மித் ப்ளெயிங் லெவனில் இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா அணிக்கு இன்னும் எந்த வீரர் எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம் நிலவி வருகிறது. இது உலகக்கோப்பை தொடரின் போது பெருத்த பாதிப்பை ஏற்படுத்தலாம். ஸ்டீவ் ஸ்மித் போன்ற அனுபவம் மிக்க வீரரை ஏன் சரியாக பயன்படுத்த வில்லை? அவரை துவக்க வீரராக இறக்கினால், நிச்சயம் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார். அந்த அளவிற்கு பங்களிப்பு கொடுக்ககூடியவர். நிச்சயம் அவருக்கு அதிக நேரம் அணியில் விளையாட இடம் கொடுக்க வேண்டும்.

அணியில் இன்னும் நான்காவது இடம் யாருக்கு என்று தெரியவில்லை. அந்த இடத்தில் ஸ்மித் மிகச் சரியான வீரராக இருப்பார். துவக்கத்தில் விக்கெட்டுகளை இழக்கும் பொழுது இவர் நிச்சயம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைவார். அனுபவமிக்க வீரரின் பங்களிப்பை புரிந்து கொண்டு அணி நிர்வாகம் உரிய முறையில் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஆஸ்திரேலிய அணி ஸ்மித்தை உரிய முறையில் பயன்படுத்தினால் அணிக்கு எது பலவீனம் என்பதே தெரியாத அளவிற்கு தனது ஆட்டத்தின் மூலம் எதிரணியை திணறடிப்பவர்.” என பெருமிதமாகவும் பேசினார்.