அவர் அடுத்த கேப்டன் நான்தான் என்றார் ; அடுத்து நான் டீம்லையே இல்ல – சேவாக் வெளியிட்ட சுவாரசிய தகவல்!

0
1180
Sehwag

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் துவக்க வீரருமான , வீரேந்தர் சேவாக் தான் பணியாற்றிய பயிற்சியாளர்களில் யார் சிறந்தவர் ? என்று கூறியுள்ளார்.

இந்திய மட்டைப்பந்து அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆக , தனது மட்டைப்பந்து வாழ்க்கையை தொடங்கினார் சேவாக் . அந்த காலகட்டத்தில் இந்திய அணியின் பிரதான துவக்க ஆட்டக்காரராக வெள்ளைப்பந்து மற்றும் சிவப்புப்பந்து என இரண்டிலும் சச்சின் இருந்தார் . அந்த நேரத்தில் சச்சினுக்கு காயம் ஏற்பட்டு சில காலங்கள் விளையாடாமல் இருக்க , அப்பொழுது அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி , விரேந்தர் சேவாக்கை ஓபனாராக அனுப்பினார் .

- Advertisement -

தனக்கே உரிய பாணி என்று அதிரடி ஆட்டத்தை தேர்ந்தெடுத்து வெளிப்படுத்த தொடங்கினார். வெள்ளைப்பந்தாக இருந்தாலும் சரி , சிவப்புப்பந்தாக இருந்தாலும் சரி , தன்னுடைய பணி வந்த முதல் பந்தில் இருந்து பவுண்டரி அடிப்பதுதான் , என்பதை ஒவ்வொரு போட்டியிலும் வெளிக்காட்டி இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் .

இவரின் விளையாட்டு காலத்தை திரும்பிபார்க்கும் போது , மூன்று வெவ்வேறு வெளிநாட்டு பயிற்சியாளர்களின் கீழ் விளையாடி உள்ளார் , என்பதை நம்மால் அறிய முடிகிறது . பயிற்சியாளர் ஜான் ரைட்டின் கீழ் தொடங்கி , கடைசியாக காரி கிரிஸ்டன் பயிற்சியின் கீழ் விளையாடினார் .

இதற்கிடையில் 2005- 2007 இடையான காலகட்டத்தில் கிரேக் சாப்பல் பயிற்சியின் கீழ் விளையாடினார். இது பற்றி அவர் பேசும் போது “அவர் என்னிடம் வந்து நீதான் அடுத்த கேப்டன் என்று சொன்னார் ஆனால் நானே எதிர்பார்க்காத வகையில் அடுத்த இரண்டு மாதத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் இதற்கு என்ன காரணமோ தெரியவில்லை ” என்று கூறினார் . பின்னர் அணியில் சேர்க்கப்பட்டு விளையாடினார் என்பது குறிப்பிட தக்கது .

- Advertisement -

தொடர்ந்து நடைபெற்ற 2007 உலகக்கோப்பையில் இந்திய அணியின் பங்களிப்பானது லீக் சுற்றோடு முடிந்தது . அதற்கு பின் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக தோனியும் , துணைக் கேப்டனாக வீரந்தர் சேவாக்கும் செயல்பட்டனர் . இந்த தொடரில் இந்திய அணியானது தலைமை பயிற்சியாளரின்றி களமிறங்கியது . களமிறங்கியதோடு மட்டுமல்லாமல் கோப்பையும் வென்று சாதித்து காட்டியது .

அதற்குப்பின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அணியில் இணைந்தார் அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது . சேவாக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .

இதனை பற்றி சேவாக் கூறுகையில் ” நான் பணியாற்றிய இரண்டு சிறந்த வெளிநாட்டு பயிற்சியாளர்கள் ஜான் ரைட் மற்றும் கேரி கிரிஸ்டன் என்பேன் . இந்த இருவரில் யார் சிறந்தவர் என்று என்னை கேட்டால் , நான் எப்போதும் கேரி கிரிஷ்டன் பக்கம் தான் ” என்று கூறினார் .

மேலும் சேவாக் கூறுகையில் “பயிற்சியாளர் என்பவர் ஒரு வீரர் எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் . இந்த விஷயத்தில் கிரிஸ்டன் சிறந்து விளங்கினார் . அவர் பயிற்சியின் கீழ் பயிற்சி செய்யும் பொழுது நான் 50 பந்துகளை எதிர்கொண்டால் , டிராவீட்டும் சச்சினும் 200 பந்துகளுக்கு மேல் பயிற்சி செய்வார்கள் ” என்று கூறினார்.
இவ்வாறு பேசும்பொழுது வெளிநாட்டு பயிற்சியாளரான கிரேக் சாப்பல் பற்றி அவர் பேசவில்லை என்பது குறிப்பிட தக்கது .

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பற்றி சேவாக் கூறுகையில்
” தற்போது இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க வெளிநாட்டவர் யாரும் தேவையில்லை என்றும் முன்னாள் இந்திய வீரர்களான லெட்சுமனன் , சவுரவ் கங்குலி என பலர் உள்ளார்கள் இவர்களே போதுமானவர்கள் “என்று கூறினார் .

இந்திய அணி 2007 உலக கோப்பையை கிரேக் சேப்பல் பயிற்சியின் கீழ் விளையாடியது . இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி கத்துக்குட்டி அணியான வங்கதேசத்திடம் முதல் போட்டியில் தோற்று , லீக்சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராகவும் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.